1991 டிசம்பர் 30க்கும் 1999 நவம்பர் 29க்கும் இடையே 15 ஆண்டுகளுக்கும் குறைவாக பணிக்காலம் முடித்திருந்த நிலையில் மரணம் அடைந்த அல்லது பணிக் காலத்தில் உடல் ஊனமடைந்த சில பாதுகாப்பு சேவைகள் பணியாளர்களின் கணக்கில் சேர்த்து வைக்கப்பட்ட 180 நாட்கள் வரையிலான விடுமுறையை ரொக்கம் ஆக்கிக்கொள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்த குறிப்பிட்ட காலத்தில் பணியில் இருந்து மரணம் அடைந்த அல்லது உடல் ஊனமுற்ற பாதுகாப்பு சேவைகள் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் 9,777 பேரின் குடும்பத்தினர் இந்த முடிவினால் பயன் அடைவார்கள். கார்கில் போர் (“விஜய் நடவடிக்கை”) சார்ந்த காலத்தில் பெரும் எண்ணிக்கையிலான ஆள்சேதம் ஏற்பட்டதால் இந்த காலம் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் இதே காலகட்டத்தில் தான் ஜம்மு காஷ்மீரிலும், வட கிழக்கு பகுதிகளிலும் கிளர்ச்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.