பூட்டான் தேசிய சபை தலைவர் ஜிக்மே சங்க்போ மற்றும் பூட்டான் தேசிய குழுவின் தலைவர் டாக்டர் சோனம் கிங்கா தலைமையிலான பூட்டான் நாடாளுமன்ற உறுபினர்கள் குழு பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர்.
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் மறைவிற்கு, பூட்டான் அரசு மற்றும் மக்கள் சார்பாக தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக திரு ஜிக்மே சங்க்போ பிரதமர் திரு நரேந்திர மோடியிடம் கூறினார்.
பூட்டான் நாடாளுமன்ற உயர் நிலை குழுவை வரவேற்ற பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியா- பூட்டான் இடையே அரசியல் ரீதியிலான ஆதரவிற்கு இது வழி வகுத்து உள்ளது. பூட்டான் நாட்டின் மக்களாட்சி சிறப்பாக செயல்பட வழி வகுக்க டிரக் கியல்போஸ் (Druk Gyalpos) தொடர்ந்த தொலைநோக்கு பார்வையை பாராட்டுவதாக பிரதமர் தெரிவித்தார். மக்களாட்சியின் மாண்பை உலகுக்கு தெரிவிப்பதில் பூட்டான் நாடு ஒரு உதாரணமாக திகழ்கிறது என்றார்.
கடந்த 2014ஆம் ஆண்டு பூட்டான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டதை சுட்டிக்காட்டிய பிரதமர் நரேந்திர மோடி தான் பதவியேற்றவுடன் பிரதமராக வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்ட முதல் நாடு பூட்டான் நாடு என்பதை அப்போது நினைவு கூர்ந்தார். இதைத் தொடர்ந்து நீர்மின் திட்டம் உட்பட பல திட்டங்களில் இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவு திருப்திகரமாக இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
பூட்டான் நாட்டின் வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து ஒரு நட்பு நாடாக நீடிக்கும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.