ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 70வது கூட்டத்தொடரின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. மொகென்ஸ் லைக்டாக்ஃப்ட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வரவேற்றார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 70வது கூட்டத் தொடர் மிக முக்கியமானது என்றும் அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மொகென்ஸ் லைக்டாக்ஃப்ட்டை வாழ்த்துவதாகவும் பிரதமர் தெரிவித்தார். 2030ம் ஆண்டிற்கான வளம் குன்றா வளர்ச்சி குறித்த செயல் நிரல்களை கடைபிடிப்பதற்கான தீர்மானத்திற்காக ஐக்கிய நாடுகள் சபையின் உச்சி மாநாடு துவங்க உள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் தேதி நடைபெற உள்ள இந்த உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்ள தான் ஆர்வமாக இருப்பதாக அப்போது பிரதமர் தெரிவித்தார். 2030ம் ஆண்டிற்கான நிலையான வளர்ச்சி குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படுவது பற்றி பிரதமர் கூறுகையில் வளர்ச்சிக்கான பல திட்டங்களை குறிப்பாக தூய்மை இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம், டிஜிட்டல் இந்தியா, திறன்மிகு இந்தியா, நவீன நகரங்கள் அமைப்பது, ஜன்தன் யோஜனா போன்ற திட்டங்களை ஏற்கனவே இந்திய அரசு செயல்படுத்தி வருகின்றது என்றும் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 70வது ஆண்டு கூட்டம் ஐக்கிய நாடுகள் சபைக்கு மிக முக்கியமானது என்று பிரதமர் குறிப்பிட்டார். மக்களின் எதிர்பார்ப்பிற்கு உகந்தவாறு செயல்படுவது என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டம் உறுதிப்படுத்த வேண்டும் என்றார் அவர். ஐக்கிய நாடுகளின் சபையின் பாதுகாப்பு கவுன்சிலை சீரமைப்பது குறித்த பிரச்சினை, தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கான சட்ட வழிமுறைகளை வலுப்படுத்துவது போன்றவற்றிற்கு முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
ஐக்கிய நாடுகளில் பொதுச் சபை 70வது ஆண்டு கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னுரிமைகள் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி திரு. மொகென்ஸ் லைக்டாக்ப்ஃட்யிடம் விளக்கினார். இது பற்றி அவர் கூறுகையில் முக்கிய “முடிவுகளை எடுக்கும் நாடுகளுக்கான குழு”வை அமைப்பது பற்றி உலக நாடுகளின் ஒத்துழைப்பை ஐக்கிய நாடுகள் சபை பெற வேண்டும் என்றும் தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்த பிரச்சினைகள், சர்வதேச அளவில் அமைதி மற்றும் பாதுகாப்பு பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாடு ஆகியவற்றை குறிப்பிட்டார்.
உலகில் ஜனநாயகத்தை பின்பற்றும் பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியா ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி பாதுகாப்பு பணிகளில் பெரிய அளிவில் ஈடுபடுகிறது என்றும் ஆகவே ஐக்கிய நாடுகள் சபையில் முடிவுகளை மேற்கொள்ளும்போது இந்தியாவிற்கு பெரும் பங்கை அளிக்க வேண்டியது அவசியம் என்றும் திரு. மொகென்ஸ் லைக்டாக்ஃப்ட் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி பாதுகாப்பு பணிகளில் இந்தியா தொடர்ந்து ஈடுபடும் என்று பிரதமர் அப்போது உறுதியளித்தார்.
தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்த பிரச்சினைகளை இரு தலைவர்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். பாரிசில் நடைபெற உள்ள COP-21 மாநாட்டில் வளரும் நாடுகளுக்கு உகந்தவாறு தீர்மானங்கள் நிறைவேற்றபடும் என்று இரு தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்தனர்.
President-elect of @UN General Assembly Mr. Mogens Lykketoft & I had a meeting today. @lykketoft pic.twitter.com/hBM7RGcIqr
— Narendra Modi (@narendramodi) August 31, 2015