பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஜி.எஸ்.டி. தொடர்பான பின்வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது :
மேற்படி நான்கு மசோதாக்களும் முன்னதாக ஜி.எஸ்.டி. கவுன்சிலால் கடந்த ஆறு மாதங்களாக நடத்தப்பட்ட 12 கூட்டங்களில் பகுதிவாரியாக விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டவை.
மாநிலத்துக்குள் சரக்குகள் அல்லது சேவைகள் வழங்குதல் அல்லது இரண்டுக்கும் மத்திய அரசால் வரி விதித்து வசூலிக்கப்படுவதற்கு சி.ஜி.எஸ்.டி. மசோதா வகை செய்கிறது. மற்றொருபுறத்தில், மாநிலங்களுக்கு இடையில் சரக்குகள் மற்றும் சேவைகள் வழங்குதல் அல்லது இரண்டுக்கும் மத்திய அரசால் வரி விதித்து வசூல் செய்வதற்கு ஐ.ஜி.எஸ்.டி. மசோதா வகை செய்கிறது.
சட்டப்பேரவைகள் இல்லாத யூனியன் பிரதேசத்துக்குள் சரக்குகள் மற்றும் சேவைகள் அளிப்பதற்கு வரி விதித்து வசூல் செய்வதற்கு யூ.டி.ஜி.எஸ்.டி. வகை செய்கிறது. யூனியன் பிரதேச ஜி.எஸ்.டி., மாநிலங்களின் சரக்குகள் மற்றும் சேவைகள் வரியை (எஸ்.ஜி.எஸ்.டி.) போன்றதாக இருக்கும். மாநிலத்துக்குள் சரக்குகள் மற்றும் சேவைகள் அளித்தல் அல்லது இரண்டுக்கும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் வரி விதித்து வசூல் செய்வதாக இது இருக்கும்.
சரக்குகள் மற்றும் சேவைகள் வரியை அமல் செய்வதால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டுவதற்காக இழப்பீட்டு மசோதா வகை செய்கிறது. அரசியல் சாசனத்தின் (நூற்றி ஒன்றாவது திருத்தம்) சட்டம் 2016 பிரிவு 18-ன்படி ஐந்தாண்டு காலத்துக்கு இது வழங்கப்படும்.
பின்னணி :
மிகப்பெரிய சீர்திருத்தங்களில் ஒன்றாக உள்ள ஜி.எஸ்.டி.யை கூடிய விரைவில் அறிமுகம் செய்வதில் அரசு உறுதியாக உள்ளது. ஜி.எஸ்.டி.யை தொடங்கும் தேதியை ஜூலை 1 என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு செய்துள்ளது. தொழில் வர்த்தகத் துறையினருக்கு ஜி.எஸ்.டி.யின் விதிகளை விளக்குவதற்கு நாடு தழுவிய அளவில் பிரச்சார முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று நிதியமைச்சர் தமது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டிருந்தார்.
*****