வெளிப்படைத் தன்மையும் பொறுப்புணர்வும் மக்களுக்கான அரசாங்கத்தின் இரு தூண்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக நம்புகிறார். வெளிப்படைத்தன்மையும் பொறுப்புணர்வும் பொதுமக்களை அரசுடன் நெருக்கமாக இணைப்பதுடன் மட்டுமின்றி, அரசின் முடிவெடுக்கும் நடிவடிக்கைகளில் சரிசமமாக, ஒரு அங்கமாகப் பங்கேற்கவும் உதவுகிறது.
4 முறை முதல்வராக பதவி வகித்து சாதனை புரிந்த நரேந்திர மோடி, தன்னுடைய அரசை திறந்த மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாற்ற உறுதியான நடிவடிக்கை எடுத்தார். விதிகளும் கொள்கைகளும் குளிரூட்டப்பட்ட அறைகளில் வடிவமைக்கப்படவில்லை; மாறாக அவை பொதுமக்கள் மத்தியில் வடிவமைக்கப்பட்டன. வரைவுக் கொள்கைகள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கூறுவதற்காக அவை இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அதேசமயம், ‘கரிப் கல்யாண் மேளா’க்கள் போன்ற நடவடிக்கைகள் எந்தவித சிவப்பு நாடா இடையூறுகளும் இல்லாமல் நேரடியாக வளர்ச்சியின் பலன்கள் பொதுமக்களைச் சென்றடைய உதவின. மற்றொரு உதாரணம், ‘ஒரு நாள் நிர்வாகம்’. இதன் மூலம் குறிப்பிட்ட கால அளவுக்குள், மின்னணு நிர்வாக உள்கட்டமைப்பு மூலம் பொதுமக்களுக்கான சேவைகள் வழங்கப்பட்டன. அரசின் குடிமக்களுக்கான சேவைகள் அனைத்தையும் குடிமக்கள் சாசனத்தின் கீழ் கொண்டு வருவதுதான் இதன் முக்கிய நோக்கம்.
வெளிப்படைத்தன்மையின் மீதான தனது உறுதியான நிலைப்பாட்டை அவர் செயல்படுத்தியதனால் திறந்த, வெளிப்படையான, மக்களை மையப்படுத்திய அரசு எனும் புதிய சகாப்தத்தை அவர் இந்திய மக்களுக்கு உணர்த்தி உள்ளார்.