Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதிய காப்பீட்டு திட்டம் – 2017


பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதிய காப்பீட்டுத் திட்டம்-2017-க்கு (Varishtha Pension Bima Yojana 2017 – VPBY 2017) செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய அரசின் நிதி உள்ளடக்கம் மற்றும் சமூக பாதுகாப்புக்கான வாக்குறுதியை நிறைவேற்றுவதன் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டம், நடப்பு நிதியாண்டிலேயே இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) மூலம் செயல்படுத்தப்படும். இதில், வயதானவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கப்படுவதோடு, 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள், நிலையில்லாத சந்தை காரணிகளால், எதிர்காலத்தில் வட்டி வருவாய் குறையாமல் பாதுகாக்கப்படுவார்கள். இந்தத் திட்டம், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமாகும். இதன்படி, 10 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 8 சதவீத வட்டி அடிப்படையில் ஓய்வூதியம் கிடைப்பது உறுதிப்படுத்தப்படும். இந்த ஓய்வூதியத்தை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் பெற்றுக் கொள்ளலாம். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் வழங்கும் நிதிக்கும், ஆண்டுக்கு 8% உறுதியளிக்கப்பட்ட நிதிக்கும் இடையேயான வேறுபாட்டை ஆண்டுதோறும் மானிய அடிப்படையில் மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும்.

மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதிய காப்பீட்டுத் திட்டம்-2017-யை தொடங்கப்பட்ட தேதியிலிருந்து ஓராண்டு வரை எடுத்துக் கொள்ளும் வகையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

*****