Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தென் கொரியாவின் சர்வதேச தடுப்பூசி மருந்து நிலையத்தில் இந்தியா உறுப்பினரானதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவை, தென் கொரியாவின் சர்வதேச தடுப்பூசி மருந்து நிலையத்தின் நிர்வாகக் குழுவில் முழு உறுப்பினரானதற்கு ஒப்புதல் அளித்தது. இவ்வாறு உறுப்பினரானதற்காக இந்தியா அந்த நிலையத்திற்கு 5,00,000 டாலர்கள் ஆண்டுதோறும் செலுத்த வேண்டும்.

பின்னணி

ஐக்கிய நாடுகளின் முயற்சியில் தென் கொரியாவில் 1997ம் ஆண்டு, சர்வதேச தடுப்பூசி மருந்து நிலையம் தொடங்கப்பட்டது. குழந்தைகள் மற்றும் மக்களை கொடிய நோய்களில் இருந்து காப்பதே இந்நிலையத்தின் நோக்கம். 2007ம் ஆண்டு, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலோடு இந்தியா இந்நிலையத்தில் சேர்ந்தது. டிசம்பர் 2012ல் அந்த நிலையத்தின் நிர்வாகக் குழு, புதிய நிர்வாக அமைப்பை உருவாக்க ஒப்புதல் அளித்தது. இதன்படி, உறுப்பு நாடுகள், அந்த நிலையத்தின் ஆண்டு பட்ஜெட்டில் ஒரு தொகையை செலுத்த வேண்டும். இந்தியா குரூப் 1 பட்டியலில் வருவதால் அது ஆண்டுதோறும் 50,000 டாலர்கள் செலுத்த வேண்டும்.

*****