Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தாய்லாந்து முன்னாள் பிரதமருடன் பிரதமர் திரு மோடி சந்திப்பு

தாய்லாந்து முன்னாள் பிரதமருடன் பிரதமர் திரு மோடி சந்திப்பு


தாய்லாந்து முன்னாள் பிரதமர் திரு. தக்சின் ஷினவத்ராவை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பாங்காக்கில் சந்தித்தார். பாதுகாப்பு, வர்த்தகம், கலாச்சாரம் மற்றும் பல துறைகளில் இந்தியா மற்றும் தாய்லாந்து இடையேயான ஒத்துழைப்பின் மகத்தான வாய்ப்புகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

இந்த சந்திப்பை தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில்   பிரதமர் குறிப்பிட்டதாவது:

“தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர், ஆட்சி மற்றும் கொள்கை உருவாக்கம் தொடர்பான விஷயங்களில் விரிவான அனுபவம் கொண்டவர். இந்தியாவின் சிறந்த நண்பரான அவர், அடல் அவர்களுடன் மிகவும் அன்பான உறவைக் கொண்டிருந்தார்.

திரு. ஷினவத்ராவும், நானும் இந்திய-தாய்லாந்து ஒத்துழைப்பு குறித்தும், அது அந்தந்த நாட்டு மக்களுக்கு எவ்வாறு பயனளிக்கிறது என்பது குறித்தும் விரிவாகப் பேசினோம். பாதுகாப்பு, வர்த்தகம், கலாச்சாரம் மற்றும் பல துறைகளில் உள்ள அபரிமிதமான வாய்ப்புகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்.

@ThaksinLive”

*****

RB/DL