Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பவலியாலி தாம் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்


குஜராத் பர்வாட் சமாஜ் தொடர்பான பவலியாலி தாம் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி  மூலம் இன்று உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய திரு மோடி, மஹந்த் ஸ்ரீ ராம் பாபு  அவர்களுக்கும், சமூகத் தலைவர்கள் மற்றும் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். பர்வாட் சமூகத்தின் பாரம்பரியங்கள் மற்றும் இந்த பாரம்பரியங்களை நிலைநிறுத்துவதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த வணக்கத்திற்குரிய துறவிகள் மற்றும் மஹந்த்களுக்கு மரியாதை செலுத்தி  அவர் தனது உரையைத் தொடங்கினார். வரலாற்றுச்  சிறப்புமிக்க மகா கும்பமேளாவுடன் தொடர்புடைய அளவற்ற மகிழ்ச்சி மற்றும் பெருமிதத்தை எடுத்துரைத்த திரு மோடி, இந்தப் புனிதமான நிகழ்வின் போது மஹந்த் ஸ்ரீ ராம் பாபு  அவர்களுக்கு மகாமண்டலேஷ்வர் என்ற பட்டம் வழங்கப்பட்ட குறிப்பிடத்தக்க தருணத்தை குறிப்பிட்டு, இது ஒரு  குறிப்பிடத்தக்க சாதனை  என்றும், அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறினார். மஹந்த் ஸ்ரீ ராம் பாபு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், அவர்களின் பங்களிப்புகள் மற்றும் சாதனைகளை  எடுத்துரைத்தார்.

 

கடந்த ஒரு வாரமாக, பாவ்நகரின் நிலம் கிருஷ்ணரின் பிருந்தாவனமாக மாறியதாகத் தோன்றியதாக திரு மோடி கூறினார். இது, சமூகத்தால் நடத்தப்பட்ட பகவத் கதையை எடுத்துக்காட்டுகிறது. அந்தச் சூழல் பக்தியால் நிறைந்ததாகவும், மக்கள் கிருஷ்ணரின் சாராம்சத்தில் மூழ்கியதாகவும் விவரித்தார். “பவலியாலி ஒரு மத தளம் மட்டுமல்ல, பர்வாட் சமூகத்திற்கும் பலருக்கும் நம்பிக்கை, கலாச்சாரம் மற்றும் ஒற்றுமையின் சின்னமாகவும் விளங்குகிறது” என்று அவர் மேலும் கூறினார்.

 

நாக லக்கா தாக்கூரின் ஆசியுடன், பவலியாலி என்ற புனிதத் தலம் பர்வாட் சமூகத்தினருக்கு எப்போதும் உண்மையான திசையையும், எல்லையற்ற உத்வேகத்தையும் அளித்துள்ளது என்று பிரதமர் வலியுறுத்தினார். ஸ்ரீ நாகலக்கா தாகூர் ஆலயத்தின் மறு கட்டமைப்பின் பொன்னான வாய்ப்பை எடுத்துரைத்த அவர், இது ஒரு முக்கியமான தருணம் என்று கூறினார். கடந்த வாரத்தில் நடந்த துடிப்பான கொண்டாட்டங்களைக் குறிப்பிட்ட அவர், சமூகத்தின் உற்சாகத்தையும் ஆற்றலையும் பாராட்டினார். ஆயிரக்கணக்கான பெண்கள் நிகழ்த்திய ராஸ் நடன நிகழ்ச்சியைப் பற்றி அவர் குறிப்பிட்டார், இது பிருந்தாவனத்தின் வாழும் உருவகம்  என்றும், நம்பிக்கை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் இணக்கமான கலவை என்றும் விவரித்தார், இது மகத்தான மகிழ்ச்சி மற்றும் திருப்தியின் ஆதாரமாக  விளங்குவதாக அவர் தெரிவித்தார். நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கலைஞர்களின் பங்களிப்புகளை அவர் எடுத்துரைத்தார், நிகழ்வுகளை உயிர்ப்பித்து, சமூகத்திற்கு சரியான நேரத்தில் செய்திகளை வழங்கியதாகக் கூறினார். பகவத் கதை மூலம் சமூகம் தொடர்ந்து மதிப்புமிக்க செய்திகளைப் பெறும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அவர் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டதுடன், அவர்களின் முயற்சிகள் முடிவில்லா பாராட்டுகளுக்கு தகுதியானவை என்று கூறினார்.

 

இந்த புனிதமான நிகழ்ச்சியில் பங்கேற்க தனக்கு அழைப்பு விடுத்ததற்காக மஹந்த் ஸ்ரீ ராம் பாபு அவர்களுக்கும், பவலியாலி தாம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் நன்றி தெரிவித்த பிரதமர், நாடாளுமன்ற கடமைகள் காரணமாக நேரில் கலந்து கொள்ள இயலவில்லை என்று தெரிவித்தார்.  வருங்காலத்தில் அங்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

 

பர்வாட் சமூகம் மற்றும் பவலியாலி தாமுடனான தனது நீண்டகால தொடர்பை எடுத்துரைத்த திரு மோடி, சேவையில் சமூகத்தின் அர்ப்பணிப்பு, இயற்கை மீதான அவர்களின் அன்பு மற்றும் பசுவின் பாதுகாப்புக்கான அவர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பாராட்டினார், இந்த மதிப்புகள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை என்று விவரித்தார். சமூகத்தில் ஆழமாக எதிரொலிக்கும் பகிரப்பட்ட உணர்வு குறித்து அவர் குறிப்பிட்டார்.

 

நாக லக்கா தாக்கூரின் ஆழ்ந்த பாரம்பரியத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய திரு மோடி, அவரது பங்களிப்புகள் சேவை மற்றும் உத்வேகத்தின் கலங்கரை விளக்கம் என்று பாராட்டினார். பல நூற்றாண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து நினைவுகூரப்பட்டு கொண்டாடப்படும் தாக்கூரின் முயற்சிகளின் நீடித்த தாக்கத்தை அவர் எடுத்துரைத்தார். குஜராத்தில் நிலவிய சவாலான காலங்களில், குறிப்பாக கடும் வறட்சி நிலவிய காலகட்டங்களில் பூஜ்ய இசு பாபு ஆற்றிய குறிப்பிடத்தக்க சேவைகள் குறித்து தனது தனிப்பட்ட  கருத்தை பிரதமர் பகிர்ந்து கொண்டார். தண்டுகா, ராம்பூர் போன்ற பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்ந்து நிலவி வந்ததை பிரதமர் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு பூஜ்ய ஈசு பாபுவின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டிய பிரதமர், இது குஜராத் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டு போற்றப்படும் தெய்வீகச் செயல் என்று விவரித்தார். இடம்பெயர்ந்த சமூகங்களின் நலன், அவர்களின் குழந்தைகளின் கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கிர் பசுக்களைப் பாதுகாப்பதில் இசு பாபுவின் அர்ப்பணிப்பை பிரதமர் மேலும் எடுத்துரைத்தார். இசு பாபுவின் ஒவ்வொரு அம்சமும் சேவை மற்றும் இரக்கத்தின் ஆழமான பாரம்பரியத்தை பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

 

கடின உழைப்பு மற்றும் தியாகத்தில் பர்வாட் சமூகத்தினரின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டிற்காக அவர்களைப் பாராட்டிய பிரதமர், அவர்களின் நிலையான முன்னேற்றம் மற்றும் மீண்டெழும் திறனை வலியுறுத்தினார். சமூகத்தினருடன் கடந்த காலத்தில் தாம் நடத்திய கலந்துரையாடல்களை நினைவு கூர்ந்த பிரதமர், கல்வியின் முக்கியத்துவத்தை உணரும் வகையில் குச்சிகளை சுழற்றுவதிலிருந்து பேனாக்களை பயன்படுத்தும் நிலைக்கு மாறுமாறு அவர்களை ஊக்குவித்தார். பர்வாட் சமுதாயத்தின் புதிய தலைமுறையினர் இந்தத் தொலைநோக்குப் பார்வையை ஏற்றுக்கொண்டு குழந்தைகள் கல்வியின் மூலம் முன்னேறுவது குறித்து அவர் பெருமிதம் தெரிவித்தார். இந்த சமூகத்தின் மகள்கள் கூட இப்போது தங்கள் கைகளில் கணினிகளை வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட திரு மோடி, மேலும் முன்னேற்றத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். இயற்கை மற்றும் கலாச்சாரத்தின் பாதுகாவலர்களாக சமூகத்தின் பங்கை வலியுறுத்திய அவர், “அதிதி தேவோ பவ” பாரம்பரியத்தின் உருவகமாக அவர்கள் இருப்பதைப் பாராட்டினார். கூட்டுக் குடும்பங்களுக்குள் முதியோர்கள் பராமரிக்கப்படும் பர்வாட் சமுதாயத்தின் தனித்துவமான மதிப்புகள், தெய்வீகத்திற்கு சேவை செய்வதற்கு இணையான சேவை மனப்பான்மையை பிரதிபலிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். நவீனத்தை தழுவும் அதே வேளையில் பாரம்பரியத்தை பாதுகாக்கும் சமூகத்தின் முயற்சிகளை அங்கீகரித்த திரு மோடி, இடம்பெயர்ந்த குடும்பங்களின் குழந்தைகளுக்கு விடுதி வசதிகளை ஏற்படுத்துதல், உலக அளவில் புதிய வாய்ப்புகளுடன் சமூகத்தை இணைத்தல் போன்ற முயற்சிகளை பாராட்டினார். இந்த சமூகத்தின் பெண்கள் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்திய அவர், குஜராத்தின் கேல் மகா கும்பமேளாவின் போது அவர் கண்ட திறனை எடுத்துரைத்தார். கால்நடை வளர்ப்பில் சமூகத்தினரின் அர்ப்பணிப்பையும், குறிப்பாக நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள கிர் பசு இனத்தை பாதுகாப்பதில் அவர்களின் முயற்சிகளையும் அவர் வலியுறுத்தினார். கிர் இனப் பசுக்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பது குறித்து பேசிய அவர், சமுதாயம் தங்கள் கால்நடைகள் மீது காட்டும் அதே அக்கறையை  தங்கள் குழந்தைகளுக்கும் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

பர்வாட் சமூகத்தினருடனான தனது ஆழமான தொடர்பை வலியுறுத்திய திரு மோடி, அவர்களை தனது குடும்பம் மற்றும் கூட்டாளிகள் என்று விவரித்தார், பவலியாலி தாமில் குழுமியிருந்த கூட்டம் குறித்து கருத்து தெரிவித்த திரு மோடி, அடுத்த 25 ஆண்டுகளுக்குள் வளர்ந்த பாரதம்  குறித்த தனது தொலைநோக்குப் பார்வைக்கு இந்த சமூகம் ஆதரவளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், “அனைவரும் இணைவோம்” என்பது நாட்டின் மிகப்பெரிய பலம் என்று செங்கோட்டையில் இருந்து தாம் வெளியிட்ட அறிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.  வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதற்கான முதல்படியாக கிராமங்களை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். கோமாரி நோயை எதிர்த்துப் போராடுவதற்காக கால்நடைகளுக்கான அரசின் இலவச தடுப்பூசி திட்டத்தை எடுத்துரைத்த அவர், தங்கள் கால்நடைகளுக்கு வழக்கமான தடுப்பூசிகளை உறுதி செய்ய சமூகத்தை வலியுறுத்தினார். இந்த முயற்சியை இரக்கத்தின் செயல் என்றும், தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான ஒரு வழி என்றும் அவர் விவரித்தார். கால்நடை வளர்ப்போருக்கு கிசான் கடன் அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதையும் திரு மோடி குறிப்பிட்டார். இதன் மூலம் அவர்கள் தங்களது வர்த்தகத்தை விரிவுபடுத்திக் கொள்ள குறைந்த வட்டியில் கடன் பெற இயலும். உள்நாட்டு கால்நடை இனங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், அவற்றின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான முக்கிய முயற்சியாக தேசிய கோகுல் மிஷனை எடுத்துரைத்தார். இந்த திட்டங்களை சமூகம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மரம் நடுதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், சமூகத்தினர் தங்கள் தாய்மார்களை கௌரவிக்கும் வகையில் மரங்களை நடவு செய்ய ஊக்குவித்தார். அதிகப்படியான சுரண்டல் மற்றும் ரசாயன பயன்பாட்டால் பாதிக்கப்பட்ட பூமித்தாயின் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு வழி இது என்று அவர் விவரித்தார். இயற்கை விவசாயத்தின் மதிப்பை வலியுறுத்திய அவர், நிலத்திற்கு புத்துயிர் அளிக்க இந்த நடைமுறையைப் பின்பற்றுமாறு சமூகத்தை வலியுறுத்தினார். பர்வாட் சமூகத்தினரின் அர்ப்பணிப்பு உணர்வை பாராட்டிய திரு மோடி, மண்ணை வலுப்படுத்தும் ஆதாரமாக கால்நடை சாணத்தின் திறனை எடுத்துரைத்தார். இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதில் குஜராத் ஆளுநர் திரு. ஆச்சார்யா தேவ்ரத் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர், இந்த சமுதாயம் இதில்  பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

 

பர்வாட் சமூகத்தினருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், அனைவருக்கும் நாக லக்கா தாக்கூர் தொடர்ந்து ஆசி கிடைக்க பிரார்த்தனை செய்தார். பவலியாலி தாமுடன் தொடர்புடைய அனைத்து தனிநபர்களின் நல்வாழ்வு மற்றும் முன்னேற்றம் குறித்த தனது நம்பிக்கை குறித்து அவர் நம்பிக்கை தெரிவித்தார். கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு மோடி, சமூகத்தின் குழந்தைகள், குறிப்பாக மகள்கள் கல்வியில் சிறந்து விளங்கி வலுவான சமுதாயத்திற்கு பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நவீனத்துவம் மற்றும் வலிமை மூலம் சமூகத்தை மேம்படுத்துவதே முன்னோக்கி செல்லும் வழி என்று அவர் குறிப்பிட்டார். இந்த புனிதமான சந்தர்ப்பத்தின் ஒரு பகுதியாக இருந்ததற்காக மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்து அவர்  தனது உரையை நிறைவு செய்தார். நேரில் வந்திருந்தால் தமக்கு இன்னும் மகிழ்ச்சியைத் தந்திருக்கும்  என்று அவர் குறிப்பிட்டார்.

—–

RB/DL