Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வரலாற்றுச் சிறப்புமிக்க தண்டி யாத்திரையில் பங்கேற்ற மகாத்மா காந்திக்கும் மற்ற அனைவருக்கும் பிரதமர் மரியாதை செலுத்தினார்


இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய அத்தியாயமான வரலாற்றுச் சிறப்புமிக்க தண்டி யாத்திரையில் பங்கேற்ற அனைவருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார். மகாத்மா காந்தியின் தலைமையில் நடைபெற்ற இந்த யாத்திரை தற்சார்பு மற்றும் சுதந்திரத்திற்கான நாடு தழுவிய இயக்கத்திற்குக் காரணமாக அமைந்தது என்று திரு மோடி கூறியுள்ளார். தண்டி யாத்திரையில் பங்கேற்ற அனைவரின் துணிச்சல், தியாகம், உண்மை, அகிம்சைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவை பல தலைமுறைகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று திரு மோடி மேலும் கூறினார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“இன்று, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு குறிப்பிட்ட அத்தியாயமான வரலாற்றுச் சிறப்புமிக்க தண்டி யாத்திரையில் பங்கேற்ற அனைவருக்கும் நாம் மரியாதை செலுத்துகிறோம். மகாத்மா காந்தியின் தலைமையில் நடைபெற்ற இந்த யாத்திரை தற்சார்பு மற்றும் சுதந்திரத்திற்கான நாடு தழுவிய இயக்கத்திற்குக் காரணமாக அமைந்தது. தண்டி யாத்திரையில் பங்கேற்ற அனைவரின் துணிச்சல், தியாகம் மற்றும் உண்மை, அகிம்சைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவை பல தலைமுறைகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன”.

***

(Release ID: 2110580)
TS/IR/RR/KR