லட்சாதிபதி சகோதரி: மகளிர் தினமான இன்று நாங்கள் பெற்றுள்ள மதிப்பும் கௌரவமும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
பிரதமர்: உலகம் வேண்டுமானால் இன்று மகளிர் தினத்தைக் கொண்டாடலாம். ஆனால் நமது நாட்டின் மாண்புகளிலும், கலாச்சாரத்திலும் அன்னையே தெய்வம் என்றுதான் நாம் தொடங்குகிறோம். நமக்கு ஒருநாள் மட்டுமல்ல, 365 நாட்களும் அன்னையே தெய்வம்தான்.
லட்சாதிபதி சகோதரி: ஷிவானி மகளிர் குழுவினர் சௌராஷ்டிர கலாச்சாரத்தின் அங்கமான சிறுமணிகள் அணிவேலையை நாங்கள் செய்கிறோம். ஐயா, மணிவேலையில் 400க்கும் அதிகமான சகோதரிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்துள்ளோம். எங்களின் 11 பேரில் 3 முதல் 4 சகோதரிகள் சந்தைப்படுத்தும் வேலையை செய்கிறார்கள். 2 பேர் கணக்குகளை நிர்வாகம் செய்கிறார்கள்.
பிரதமர்: எனவே ஒரு சிலர் சந்தைப்படுத்தலுக்காக வெளியே பயணம் செய்கிறார்கள் அப்படித்தானே?
லட்சாதிபதி சகோதரி: ஆம் ஐயா, பல்வேறு மாநிலங்களுக்கும் மற்ற இடங்களுக்கும்
பிரதமர்: ஆகவே, நாடு முழுவதும் நீங்கள் பயணம் செய்திருக்கிறீர்கள்?
லட்சாதிபதி சகோதரி: ஆம் ஐயா, பெரும்பாலும் எல்லா இடங்களுக்கும் எங்களால் விடுபட்ட நகரம் மிகவும் குறைவாகவே இருக்கும்.
பிரதமர்: பாருல் பெகான் எவ்வளவு சம்பாதிக்கிறது?
லட்சாதிபதி சகோதரி: பாருல் பெகான் 40 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிக்கிறது, ஐயா.
பிரதமர்: எனவே நீங்கள் இப்போது லட்சாதிபதி சகோதரி ஆகி இருக்கிறீர்கள்?
லட்சாதிபதி சகோதரி: ஆம் ஐயா. நான் லட்சாதிபதி சகோதரி ஆகி இருக்கிறேன். எனது வருவாயை மறு முதலீடும் செய்திருக்கிறேன். என்னுடன் சேர்த்து எங்கள் குழுவில் உள்ள 11 சகோதரிகளும் லட்சாதிபதி சகோதரிகளாக மாற வேண்டும் என்று நான் கனவு காண்கிறேன். இதே சாதனையை எங்கள் கிராமத்தில் அனைத்து சகோதரிகளும் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
பிரதமர்: வாவ்!
லட்சாதிபதி சகோதரி: ஒவ்வொருவரையும் லட்சாதிபதி சகோதரி ஆக்குவது எனது இலக்காகும்.
பிரதமர்: நல்லது, 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்குவது எனது கனவாகும். 5 கோடி பேரை லட்சாதிபதி சகோதரிகளாக ஆக்க முடியும் என்று உங்களைப் போலவே நானும் நினைக்கிறேன்.
லட்சாதிபதி சகோதரி: மிகச் சரியாக ஐயா! இது ஒரு வாக்குறுதி!
பிரதமர்: இப்போது நீங்கள் அனைவரும் இணையதள வணிக உலகிற்குள் நுழைய வேண்டும். இந்த முயற்சியை மேம்படுத்த உங்களுக்கு உதவுமாறு அரசையும் நான் கேட்டுக்கொள்வேன். ஏராளமான சகோதரிகளுக்கு நாங்கள் இணைப்பை தந்திருக்கிறோம். அவர்கள் அடித்தள நிலையில் வருவாய் ஈட்டுகிறார்கள். இந்தியப் பெண்கள் வெறுமனே வீட்டு வேலை செய்வதோடு இருப்பவர்கள் அல்ல, அது தவறான கருத்து என்பதை உலகம் அறிவது அவசியமாகும். உண்மையில் அவர்கள் இந்தியாவின் பொருளாதார பலத்தை இயக்குகின்ற சக்திகளாக இருக்கிறார்கள். கிராமப்புற பெண்கள் நாட்டின் பொருளாதாரத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இரண்டாவதாக நமது பெண்கள் வெகு விரைவாகத் தொழில்நுட்பத்தை புரிந்து கொள்வதை நான் கவனித்திருக்கிறேன். ட்ரோன் சகோதரிகள் இதனை நிரூபித்திருக்கிறார்கள் என்பது எனது அனுபவமாகும். நமது நாட்டில் பெண்கள் போராடவும், உருவாக்கவும், வளர்க்கவும், செல்வத்தை படைக்கவும் இயற்கையாகவே சக்தியைக் கொண்டிருக்கிறார்கள். இந்த சக்தி நாட்டுக்கு ஏராளமான நன்மைகளைக் கொண்டுவரும் என்று நான் நம்புகிறேன்.
•••
(Release ID: 2109553)
TS/SMB/LDN/KR
Do watch this very special interaction with Lakhpati Didis, who epitomise confidence and determination! #WomensDay pic.twitter.com/lUvyIxjpOu
— Narendra Modi (@narendramodi) March 8, 2025