Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் வாழ்த்து


ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“தனிச்சிறப்பான விளையாட்டு, சிறப்பான முடிவு!

ஐசிசி சாம்பியன்ஸ் வெற்றிக் கோப்பையை தாயகத்திற்கு கொண்டு வரும் நமது கிரிக்கெட் அணியால் பெருமிதம் கொள்கிறேன். அவர்கள் போட்டி முழுவதும் அற்புதமாக விளையாடியுள்ளனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நமது அணிக்கு வாழ்த்துகள்”.

—–

(Release ID: 2109721)

TS/IR/KPG/KR