Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வளர்ச்சியடைந்த இந்தியாவை வடிவமைப்பதில் தலைசிறந்த பெண்களின் பங்களிப்புகளைப் பிரதமர் கொண்டாடினார்


சர்வதேச மகளிர் தினத்தன்று, பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்து வரும் பெண்களுக்கு தனது சமூக ஊடக தளங்களை ஒப்படைப்பதன் மூலம், இந்தியா முழுவதும் பெண்களின் மகத்தான பங்களிப்புகளைக் கொண்டாடுவதில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

தலைசிறந்த பெண்கள் தங்கள் சொந்த பயணங்களைப் பகிர்ந்துகொண்டும், மற்ற பெண்களுக்கு ஊக்கமளித்தும் வெளியிடும் உற்சாகமளிக்கும் பதிவுகளைக் காலை முதல் காண்கிறோம் என்று திரு மோடி கூறியுள்ளார். “அவர்களின் உறுதியும் வெற்றியும் பெண்கள் கொண்டிருக்கும் எல்லையற்ற ஆற்றலை நமக்கு நினைவூட்டுகின்றன. இன்று மட்டுமின்றி  ஒவ்வொரு நாளும், வளர்ச்சியடைந்த இந்தியாவை  வடிவமைப்பதில் அவர்களின் பங்களிப்பை நாம் கொண்டாடுகிறோம்” என்று பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“தலைசிறந்த பெண்கள் தங்கள் சொந்த பயணங்களைப் பகிர்ந்துகொண்டும், மற்ற பெண்களுக்கு ஊக்கமளித்தும் வெளியிடும் உற்சாகமளிக்கும் பதிவுகளைக் காலை முதல் நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். இந்தப் பெண்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு பகுதிகளில் சிறந்து விளங்கியுள்ளனர், ஆனால் ஒரே ஒரு கருப்பொருள் மட்டுமே உள்ளது – இந்திய மகளிர் சக்தியின் திறமை.

அவர்களின் உறுதியும் வெற்றியும் பெண்கள் வைத்திருக்கும் எல்லையற்ற ஆற்றலை நமக்கு நினைவூட்டுகின்றன. இன்று மட்டுமின்றி  ஒவ்வொரு நாளும், வளர்ச்சியடைந்த இந்தியாவை வடிவமைப்பதில் அவர்களின் பங்களிப்புகளை நாம் கொண்டாடுகிறோம்.”

***

SMB/DL