Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரு. டாட்சுவோ யசுனாகா தலைமையிலான ஜப்பானிய வர்த்தகக் குழுவினருடன் பிரதமர் சந்திப்பு


திரு. டாட்சுவோ யசுனாகா தலைமையிலான ஜப்பானிய வர்த்தக பிரதிநிதிக் குழுவை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார். இந்தியாவில் அவர்களின் விரிவாக்கத் திட்டங்கள் மற்றும் இந்தியாவில் தயாரித்தல், உலகிற்காக தயாரித்தல்என்பதில் உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவை தமக்கு ஊக்கமளிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

 

சமூக ஊடக  எக்ஸ் தள பதிவில் அவர் குறிப்பிட்டதாவது:

 

“திரு. டாட்சுவோ யசுனாகா தலைமையிலான ஜப்பானிய வர்த்தகக் குழுவினரை  சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவில் அவர்களின் விரிவாக்கத் திட்டங்கள் மற்றும் இந்தியாவில் தயாரித்தல், உலகிற்காக தயாரித்தல்என்பதில் உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவை ஊக்கமளித்தன. எங்கள் சிறப்பு உத்தி சார்ந்த மற்றும் உலகளாவிய கூட்டாளியான ஜப்பானுடன் பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆர்வமாக இருக்கிறோம்.”  

—-

RB/DL