புதுதில்லியில் உள்ள சுந்தர் நர்சரியில் நாளை (பிப்ரவரி 28) இரவு 7:30 மணியளவில் மாபெரும் சூஃபி இசை விழாவான ஜஹான்-இ-குஸ்ரு 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
நாட்டின் பன்முகக் கலை மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் பிரதமர் வலுவான ஆதரவாளராக இருந்து வருகிறார். அதற்கு ஏற்ப, சூஃபி இசை, கவிதை மற்றும் நடனத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட சர்வதேச விழாவான ஜஹான்-இ-குஸ்ருவில் அவர் பங்கேற்கிறார். அமீர் குஸ்ருவின் மரபைக் கொண்டாட இது உலகெங்கிலும் உள்ள கலைஞர்களை ஒன்றிணைக்கிறது. ரூமி அறக்கட்டளையால் 2001 –ம் ஆண்டில் பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், கலைஞருமான முசாபர் அலியால் தொடங்கப்பட்ட இந்த விழா இந்த ஆண்டு அதன் 25-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. இது பிப்ரவரி 28 அன்று தொடங்கி மார்ச் 2 வரை நடைபெறும்.
இந்த விழாவின் போது, பிரதமர் டி.இ.எச் பஜாரையும் பார்வையிடுவார். இதில் ஒரு மாவட்டம்-ஒரு தயாரிப்பு கைவினைப் பொருட்கள் மற்றும் நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு நேர்த்தியான கலைப்பொருட்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறி குறித்த குறும்படங்கள் போன்றவை இடம்பெறும்.
***
TS/IR/AG/DL
I will be attending Jahan-e-Khusrau at 7:30 PM tomorrow, 28th February at Sunder Nursery in Delhi. This is the 25th edition of the festival, which has been a commendable effort to popularise Sufi music and culture. I look forward to witnessing Nazr-e-Krishna during tomorrow’s…
— Narendra Modi (@narendramodi) February 27, 2025