Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரு அனில் ஜோஷி மறைவுக்கு பிரதமர் இரங்கல்


புகழ்பெற்ற குஜராத்திக் கவிஞர் திரு அனில் ஜோஷி மறைவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

குஜராத்தி இலக்கியத்தின் பழம்பெரும் கவிஞர் திரு. அனில் ஜோஷியின் மறைவுச் செய்தியைக் கேட்டு வருந்துகிறேன். நவீன குஜராத்தி இலக்கியத்தில் அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்.

இந்தத் துயரமான தருணத்தில் அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்…

ஓம் சாந்தி…!”

***

TS/IR/AG/DL