Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புதுதில்லியில் பிப்ரவரி 21, 22 தேதிகளில் தொலைநோக்கு தலைமைத்துவப் பள்ளியின் தலைமைத்துவ மாநாடு நடத்துவதற்குப் பிரதமர் பாராட்டு


புதுதில்லியில் பிப்ரவரி 21 அன்று தொலைநோக்கு தலைமைத்துவப் பள்ளி(SOUL)  நடத்தும் தலைமைத்துவ மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார்.  தலைமைத்துவம் தொடர்பான அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்கு வாழ்க்கையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களை இந்த அமைப்பு ஒருங்கிணைப்பதாக திரு மோடி கூறியுள்ளார்.  முக்கிய பிரச்சினைகள் குறித்து உரையாளர்கள் தங்களின் ஊக்கமளிக்கும் வாழ்க்கைப் பயணம் மற்றும் கண்ணோட்டங்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.  இது குறிப்பாக இளம் பார்வையாளர்களுக்குப் பயனுடையதாக இருக்கும் என்று திரு மோடி மேலும் கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில் திரு மோடி கூறியிருப்பதாவது;

“புதுதில்லியில் பிப்ரவரி 21, 22 தேதிகளில் தலைமைத்துவ மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ள தொலைநோக்கு தலைமைத்துவப் பள்ளியை நான் பாராட்டுகிறேன்.  தலைமைத்துவம் தொடர்பான அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்கு வாழ்க்கையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களை இந்த அமைப்பு ஒருங்கிணைக்கிறது.  முக்கிய பிரச்சினைகள் குறித்து உரையாளர்கள் தங்களின் ஊக்கமளிக்கும் வாழ்க்கைப் பயணம் மற்றும் கண்ணோட்டங்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.  இது குறிப்பாக இளம் பார்வையாளர்களுக்குப் பயனுடையதாக இருக்கும்.

பிப்ரவரி 21 வெள்ளியன்று நானும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறேன்.

@LeadWithSoul”

***

TS/SMB/KV/KR