Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரிட்டன் முன்னாள் பிரதமர் திரு ரிஷி சுனக் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தனர்


பிரிட்டன் முன்னாள் பிரதமர் திரு ரிஷி சுனக் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று  புதுதில்லியில் சந்தித்தனர். 

பல்வேறு விஷயங்கள் குறித்து இருதலைவர்களும் பயனுள்ள உரையாடல் நடத்தினர்.

திரு சுனக் இந்தியாவின் மகத்தான நண்பர் என்றும், இந்தியா- பிரிட்டன் உறவுகள் மேலும் வலுவடைவதில் அவர் ஆர்வம் கொண்டவர் என்றும், திரு மோடி கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“பிரிட்டன் முன்னாள் பிரதமர் திரு ரிஷி சுனக் மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது! பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் பயனுள்ள வகையில் கலந்துரையாடினோம்.

திரு சுனக் இந்தியாவின் மகத்தான நண்பர். இந்தியா -பிரிட்டன் உறவுகள் மேலும் வலுவடைவதில் அவர் ஆர்வம் கொண்டவர்.

@RishiSunak @SmtSudhaMurty”

***

TS/SMB/KV/KR