Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

எகனாமிக் டைம்ஸ் நவ் உலக வர்த்தக உச்சி மாநாடு 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

எகனாமிக் டைம்ஸ் நவ் உலக வர்த்தக உச்சி மாநாடு 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்


 

புதுதில்லியில் நடைபெற்ற எக்கனாமிக் டைம்ஸ் நவ் உலகளாவிய வர்த்தக உச்சி மாநாடு 2025-ல் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, கடந்த எக்னாமிக் டைம்ஸ் நவ் உச்சிமாநாட்டின் போது, இந்தியா புதிய வேகத்தில் பணியாற்றி வருவதாக தெரிவித்ததை நினைவு கூர்ந்தார். இந்த வேகம் இப்போது தெளிவாகத் தெரிவது குறித்தும், மக்களிடம் இருந்து ஆதரவு கிடைத்திருப்பது குறித்தும் அவர் திருப்தி தெரிவித்தார். வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற உறுதிப்பாட்டிற்கு மகத்தான ஆதரவை அளித்த ஒடிசா, மகாராஷ்டிரா, ஹரியானா, புதுதில்லி மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவதில் மக்கள் எவ்வாறு தோளோடு தோள் நின்று செயல்படுகிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று என்று அவர் கூறினார்.

இப்போது உலக அரங்கில், இந்தியா மீதான நம்பிக்கை முன்பை விட வலுவாக உள்ளது என்று  திரு நரேந்திர மோடி கூறினார். பாரிஸில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டிலும் இந்த உணர்வு பிரதிபலித்தது என்று அவர் கூறினார். 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஏற்பட்ட புதிய சீர்திருத்தப் புரட்சியின் விளைவாக இது சாத்தியமாகியுள்ளது என்று அவர் கூறினார். கடந்த பத்தாண்டுகளில் உலகின் முதல் 5 பெரிய பொருளாதார நாடுகளுக்குள் இந்தியா நுழைந்துள்ளது வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வளர்ச்சி வேகத்தை குறிக்கிறது என்று பிரதமர் கூறினார். இன்னும் சில ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.

முந்தைய அரசுகள் சீர்திருத்தங்களை புறக்கணித்தன என்றும், கடினமாக உழைக்க விருப்பமற்ற மனநிலையைக் கொண்டிருந்தன என்றும் பிரதமர் கூறினார். 

இந்தியாவில் சமீப காலம் வரை காலனி ஆதிக்க  தண்டனை சட்டங்கள் இருந்தன என்று சுட்டிக்காட்டிய திரு நரேந்திர மோடி, தண்டனை வழங்கும் அமைப்பால் நீதி வழங்க முடியவில்லை என்றும், இது நீண்டகால தாமதத்திற்கு வழிவகுத்தது என்றும் கூறினார். புதிய இந்திய நீதித்துறை சட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார். 

சொத்துரிமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒரு பெரிய சீர்திருத்தம் பற்றி குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, ஒரு நாட்டில் சொத்துரிமை இல்லாதது ஒரு முக்கியமான சவாலாக உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு தெரிவிக்கிறது என்று குறிப்பிட்டார். உலகெங்கிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களுக்கு சட்டப்பூர்வ சொத்து ஆவணங்கள் இல்லை என்றும், சொத்துரிமை வைத்திருப்பது வறுமையைக் குறைக்க உதவும் என்றும் அவர் கூறினார். முந்தைய அரசுகள் இந்த தாக்கங்களை அறிந்திருந்த போதும், இதுபோன்ற சவாலான பணிகளைத் தவிர்த்தன என்று அவர் கூறினார்.  ஸ்வாமித்வா திட்டம் இப்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதன் கீழ் நாட்டில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் ட்ரோன் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாகவும் 2.25 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு சொத்து அட்டைகள் கிடைத்துள்ளதாகவும் திரு நரேந்திர மோடி கூறினார்.  சொத்துரிமை இல்லாததால் கிராம மக்கள் வங்கிகளில் இருந்து கடன் பெற முடியவில்லை என்று பிரதமர் நினைவுபடுத்தினார். இந்த பிரச்சினை இப்போது நிரந்தரமாக தீர்க்கப்பட்டுள்ளதாகவும், ஸ்வாமித்வா திட்ட சொத்து அட்டைகளால் மக்கள் எவ்வாறு பயனடைவார்கள் என்பது குறித்து இன்று நாடு முழுவதும் பல அறிக்கைகள் வெளிவருகின்றன என்றும் அவர் கூறினார். 

சுதந்திரத்திற்குப் பிறகு, நாட்டின் பல மாவட்டங்கள் வளர்ச்சியடையாமல் போய்விட்டன என அவர் தெரிவித்தார். இந்த மாவட்டங்களில் கவனம் செலுத்தாமல், அவை பின்தங்கிய மாவட்டங்களாக முத்திரை குத்தப்பட்டு, அவற்றின் தலைவிதி கைவிடப்பட்டதாக அவர் தெரிவித்தார். இப்படிப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை முன்னேற விரும்பும் மாவட்டங்களாக அறிவித்து நிலை மாற்றப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். நுண் அளவில் நிர்வாகத்தை மேம்படுத்த இளம் அதிகாரிகள் இந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இந்த மாவட்டங்கள் பின்தங்கியுள்ள குறியீடுகளின் அடிப்படையில் அரசின் திட்டங்கள் தீவிர முறையில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்த முன்னேற விரும்பும் மாவட்டங்களில் பல உத்வேகம் அளிக்கும் மாவட்டங்களாக மாறியுள்ளன என்று அவர் தெரிவித்தார்.  குழந்தைகளுக்கான நோய்த்தடுப்பு இயக்கத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். உத்தரபிரதேசத்தின் ஷ்ராவஸ்தியில் இந்த சதவீதம் 49 சதவீதத்திலிருந்து 86 சதவீதமாகவும், தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் 67 சதவீதத்திலிருந்து 93 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது என அவர் குறிப்பிட்டார். 

 இந்தியாவில் வர்த்தக சூழல் எவ்வாறு  மாறியுள்ளது என்பதை நினைவுகூர்ந்தார். கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அவர் குறிப்பிட்டார். பத்தாண்டுகளுக்கு முன்பு இந்திய வங்கிகள் நெருக்கடியில் இருந்தன எனவும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போது நிதி உள்ளடக்கம் கணிசமாக மேம்பட்டுள்ளது என்றும், இப்போது கிட்டத்தட்ட ஒவ்வொரு கிராமத்திலும் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் ஒரு வங்கிக் கிளை உள்ளது என்றும் அவர் கூறினார்.  தனிநபர்களுக்கு முத்ரா திட்டத்தின் மூலம் ரூ.32 லட்சம் கோடி வழங்கப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார். குரு சிறு நடுத்தர நிறுவனங்களுக்கான கடன்கள் மிகவும் எளிதாகிவிட்டன என்றும் அவர் கூறினார். அரசு பெரிய அளவில் கடன்களை வழங்கும் அதே வேளையில், வங்கிகளின் லாபமும் அதிகரித்து வருகிறது என்று பிரதமர் கூறினார். ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் பொதுத்துறை வங்கிகள் ரூ.1.25 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளன என்று அவர் தெரிவித்தார். 

கடந்த பத்து ஆண்டுகளில் தமது அரசு வர்த்தகம் வர்த்தகம் செய்வதை எளிதாக்கியுள்ளது என்று பிரதமர் கூறினார்.  கடந்த பத்தாண்டுகளில் உள்கட்டமைப்பில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இதன் விளைவாக தளவாட செலவுகள் குறைந்து செயல்திறன் அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். 

எதிர்கால தயார்நிலையில் இந்தியா குறிப்பிடத்தக்க மாற்றத்தை சந்தித்து வருவதை சுட்டிக்காட்டிய திரு நரேந்திர மோடி, முதல் தொழில் புரட்சியின் போது இந்தியா காலனி ஆதிக்கத்தின் பிடியில் இருந்தது என்றார். இரண்டாவது தொழில் புரட்சியின் போது, உலகம் முழுவதும் புதிய கண்டுபிடிப்புகள் தொழிற்சாலைகள் உருவாகியதாகவும், இந்தியாவில் உள்ளூர் தொழில்கள் அழிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். சுதந்திரத்திற்குப் பிறகும், விஷயங்கள் அதிகம் மாறவில்லை என அவர் தெரிவித்தார்.  முதல் மூன்று தொழில் புரட்சிகளால் இந்தியா பெரிதாக பயனடையவில்லை என்றாலும், நான்காவது தொழில் புரட்சியில் உலகிற்கு இணையாக இந்தியா தற்போது தயாராக உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

 மக்களின் பிரச்சினைகளை தமது அரசு உணர்வுப்பூர்வமாக புரிந்துகொண்டு அவற்றைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகளை உற்சாகத்துடன் எடுத்துள்ளது என்று அவர் கூறினார். கடந்த பத்தாண்டுகளில் உள்கட்டமைப்பு மற்றும் அதிகாரமளித்தல் காரணமாக 25 கோடி இந்தியர்கள் வறுமையிலிருந்து வெளியே வந்துள்ளதாக உலகளாவிய ஆய்வுகள் கூறுவதை அவர் மேற்கோள் காட்டினார். 

நடுத்தர மக்களுக்கு உதவ, சமீபத்திய பட்ஜெட் பூஜ்ஜிய வரி வரம்பை ரூ .7 லட்சத்திலிருந்து ரூ .12 லட்சமாக உயர்த்தியுள்ளது, முழு நடுத்தர வர்க்கத்தையும் வலுப்படுத்திப் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கிறது என அவர் தெரிவித்தார். வளர்ந்த இந்தியாவின் உண்மையான அடித்தளம் நம்பிக்கை ஆகும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.  

****** 

PLM/KV