Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகரிஷி தயானந்த் சரஸ்வதியின் பிறந்ததினத்தையொட்டி அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்


சிறந்த சிந்தனையாளரும், சமூக சீர்திருத்தவாதியும், தீவிர தேசியவாதியுமான மகரிஷி தயானந்த் சரஸ்வதியின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:

சிறந்த சிந்தனையாளர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தீவிர தேசியவாதி மகரிஷி தயானந்த் சரஸ்வதியின் பிறந்ததினத்தில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அறியாமை, மூடநம்பிக்கை மற்றும் ஆடம்பரத்திற்கு எதிராக சமூகத்துக்கு விழிப்புணர்வூட்டுவதில் அவர் வாழ்நாள் முழுவதும் ஈடுபட்டார். இந்தியப் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாத்ததோடு, கல்வி, மகளிருக்கு அதிகாரமளித்தலுக்கான அவரது முயற்சிகள் என்றும் நாட்டு மக்களுக்கு உத்வேகம் அளிக்கும்.

***

(Release ID: 2102207)

TS/IR/AG/KR