மேதகு அதிபர் மக்ரோன் அவர்களே,
இங்கு கூடியுள்ள இந்தியா மற்றும் பிரான்சைச் சேர்ந்த தொழில்துறைத் தலைவர்களே,
வணக்கம், போன்ஜூர்!
இந்த அறையில் ஒரு அற்புதமான ஆற்றல், உற்சாகம் மற்றும் சுறுசுறுப்பை நான் உணர்கிறேன். இது ஒரு சாதாரண வணிக நிகழ்வு மட்டுமல்ல.
இது இந்தியா மற்றும் பிரான்சின் சிறந்த வணிக மனங்களின் சங்கமம். தற்போது வழங்கப்பட்ட தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தின் அறிக்கை வரவேற்கத்தக்கது.
நீங்கள் அனைவரும் புதுமையை கண்டுபிடியுங்கள் கள், இணைந்து ஒத்துழையுங்கள் மற்றும் உயரத்தில் முன்னேற்றங்கள் என்ற தாரக மந்திரத்துடன் வளர்ந்து வருவதை நான் காண்கிறேன். நீங்கள் கூட்டம் நடைபெறும் அறையில் மட்டும் இணைப்புகளை உருவாக்கவில்லை. நீங்கள் அனைவரும் இந்திய-பிரெஞ்சு கூட்டாண்மையையும் வலுப்படுத்துகிறீர்கள்.
நண்பர்களே,
எனது நண்பர் அதிபர் மக்ரோனுடன் இந்த மன்றத்தில் இணைவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இது எங்களின் ஆறாவது சந்திப்பு. கடந்த ஆண்டு, நமது குடியரசு தினத்தில் அதிபர் மக்ரோன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இன்று காலை நாங்கள் செயற்கை நுண்ணறிவு நடவடிக்கை உச்சிமாநாட்டிற்கு இணைந்து தலைமை தாங்கினோம். இந்த வெற்றிகரமான உச்சிமாநாட்டிற்கு அதிபர் மக்ரோனை மனதார வாழ்த்துகிறேன்.
நண்பர்களே,
இந்தியாவும் பிரான்சும் ஜனநாயக விழுமியங்களால் மட்டுமே இணைக்கப்படவில்லை. எங்கள் நட்பின் அடித்தளம் ஆழ்ந்த நம்பிக்கை, புதுமை, பொது நலம் ஆகியவற்றின் உணர்வை அடிப்படையாகக் கொண்டது.
எங்கள் கூட்டாண்மை இரண்டு நாடுகளுக்கு மட்டும் என கட்டுப்படுத்தப்படவில்லை. உலகளாவிய பிரச்சினைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள நாங்கள் ஒன்றாக ஒத்துழைக்கிறோம். எனது கடைசி வருகையின் போது, எங்கள் கூட்டாண்மைக்கான 2047 செயல் திட்டத்தை நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளோம். அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு துறையிலும் விரிவான முறையில் ஒத்துழைப்பை நாங்கள் பின்பற்றுகிறோம்.
நண்பர்களே,
உங்கள் பெரும்பாலான நிறுவனங்கள் ஏற்கனவே இந்தியாவில் உள்ளன. நீங்கள் விண்வெளி, துறைமுகங்கள், பாதுகாப்பு, மின்னணுவியல், பால் பொருட்கள், ரசாயனங்கள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் போன்ற பல்வேறு துறைகளில் தீவிரமாக இருக்கிறீர்கள்.
இந்தியாவில் பல தலைமை நிர்வாக அதிகாரிகளைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நீங்கள் நன்கு அறிவீர்கள். நாங்கள் ஒரு நிலையான அரசியல் மற்றும் கணிக்கக்கூடிய கொள்கை சூழல் அமைப்பை நிறுவியுள்ளோம்.
சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றத்தின் பாதையைப் பின்பற்றி, இன்று இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. இது உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாகும்.
இது விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும். இந்தியாவின் திறமையான இளம் திறமை, புதுமை உணர்வு ஆகியவை உலக அரங்கில் எங்கள் அடையாளமாகும்.
இன்று, இந்தியா வேகமாக ஒரு விருப்பமான உலகளாவிய முதலீட்டு இடமாக மாறி வருகிறது.
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு, குறைக்கடத்தி மற்றும் குவாண்டம் பணிகளை நாங்கள் தொடங்கியுள்ளோம். பாதுகாப்பு துறையில் நாங்கள் இந்தியாவில் தயாரியுங்கள் மற்றும் உலகத்துக்காக தயாரியுங்கள் என்று ஊக்குவிக்கிறோம். உங்களில் பலர் அதனுடன் தொடர்புடையவர்கள். விண்வெளி தொழில்நுட்பத்தில் நாங்கள் புதிய உச்சங்களை எட்டுகிறோம். இந்தத் துறை அந்நிய நேரடி முதலீட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவை விரைவாக உலகளாவிய உயிரி தொழில்நுட்ப சக்தி நிலையமாக மாற்றி வருகிறோம்.
உள்கட்டமைப்பு மேம்பாடு எங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விஷயம். இதில், ஆண்டுக்கு 114 பில்லியன் டாலருக்கும் அதிகமான பொதுச் செலவினங்களை நாங்கள் செய்து வருகிறோம். ரயில்வேயை நவீனமயமாக்கவும் மேம்படுத்தவும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிகப்பெரிய அளவில் ரயில் பாதைகளை அமைத்துள்ளோம்.
2030-ம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்ற இலக்கை நோக்கி நாங்கள் வேகமாக நகர்கிறோம். இதற்காக, சூரிய மின்கல உற்பத்தியை ஊக்குவித்துள்ளோம். நாங்கள் முக்கியமான கனிமங்கள் இயக்கத்தையும் தொடங்கியுள்ளோம்.
ஹைட்ரஜன் இயக்கத்தையும் நாங்கள் மேற்கொண்டுள்ளோம். இதற்காக, மின்பகுப்பு உற்பத்திக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 2047-ம் ஆண்டுக்குள், 100 ஜிகாவாட் அணுமின் உற்பத்தியை இலக்காகக் கொண்டுள்ளோம். இந்தத் துறை தனியார் துறைக்குத் திறக்கப்படுவதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நண்பர்களே,
இன்று இந்தியா பல்வகைப்படுத்தல் மற்றும் அபாயக் காரணிகள் இல்லாத மிகப்பெரிய மையமாக மாறி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, எங்கள் பட்ஜெட்டில் புதிய தலைமுறை சீர்திருத்தங்கள் கோடிட்டுக் காட்டப்பட்டன.
வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நம்பிக்கை அடிப்படையிலான பொருளாதார நிர்வாகத்தை ஊக்குவிக்க, ஒழுங்குமுறை சீர்திருத்தங்களுக்கான உயர் மட்டக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்க, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் உதவியுடன் “இந்தியா வர்த்தக வலை” அறிமுகப்படுத்தப்படுகிறது. வாழ்க்கையை எளிதாக்குவதற்கு ஒரு புதிய எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி குறியீட்டை நாங்கள் கொண்டு வருகிறோம்.
தேசிய உற்பத்தி இயக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காப்பீட்டுத் துறை போன்ற புதிய துறைகள் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டிற்கு திறக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சிகள் அனைத்தையும் நீங்கள் கவனமாகப் படிக்க வேண்டும்.
இந்தியாவிற்கு வருவதற்கான சரியான நேரம் இது என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். அனைவரின் முன்னேற்றமும் இந்தியாவின் முன்னேற்றத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு உதாரணம் விமானப் போக்குவரத்துத் துறையில் காணப்பட்டது, இந்திய நிறுவனங்கள் விமானங்களுக்கு பெரிய ஆர்டர்களை முன்வைத்துள்ளன. இப்போது, 120 புதிய விமான நிலையங்களைத் திறக்கப் போகிறோம், எதிர்கால சாத்தியக்கூறுகளை நீங்களே கற்பனை செய்து கொள்ளலாம்.
நண்பர்களே,
இந்தியாவின் 1.4 பில்லியன் மக்கள் 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்கத் தீர்மானித்துள்ளனர். அது பாதுகாப்பு அல்லது மேம்பட்ட தொழில்நுட்பம், நிதி தொழில்நுட்பம் அல்லது மருந்து தொழில்நுட்பம் அல்லது ஜவுளி, விவசாயம் அல்லது விமானப் போக்குவரத்து, சுகாதாரம் அல்லது நெடுஞ்சாலைகள், விண்வெளி அல்லது நிலையான வளர்ச்சி என அனைத்தையும் முன்னேற்ற உள்ளனர். இந்தத் துறைகள் அனைத்திலும் முதலீடுகள் மற்றும் ஒத்துழைப்புகளுக்கு உங்கள் அனைவருக்கும் பல வாய்ப்புகள் உள்ளன.
இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் சேர உங்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன்.
பிரான்சின் நுணுக்கமும இந்தியாவின் பேரளவும் சந்திக்கும் போது…
இந்தியாவின் வேகமும் பிரான்சின் துல்லியமும் இணையும் போது…
பிரான்சின் தொழில்நுட்பமும் இந்தியாவின் திறமையும் ஒன்றிணைகின்றன…
அப்போது, வணிக நிலப்பரப்பு மட்டுமல்ல, உலகளாவிய மாற்றமும் ஏற்படும்.
மீண்டும் ஒருமுறை, உங்கள் பொன்னான நேரத்தை செலவிட்டு இங்கு வந்ததற்கு உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
***
(Release ID: 2102063)
Addressing the India-France CEO Forum in Paris. https://t.co/S9GWeDS9My
— Narendra Modi (@narendramodi) February 11, 2025
The India-France CEO Forum plays a key role in strengthening economic ties and fostering innovation. It is gladdening to see business leaders from both nations collaborate and create new opportunities across key sectors. This drives growth, investment and ensures a better future… pic.twitter.com/gSImOqAcEZ
— Narendra Modi (@narendramodi) February 11, 2025
Le Forum des chefs d'entreprise Inde-France joue un rôle clé dans le renforcement des liens économiques et la promotion de l'innovation. Il est réjouissant de voir des chefs d'entreprise des deux pays collaborer et créer de nouvelles opportunités dans des secteurs clés. Cela… pic.twitter.com/mkOrTQTr6z
— Narendra Modi (@narendramodi) February 11, 2025
Boosting India-France business ties!
— PMO India (@PMOIndia) February 11, 2025
PM @narendramodi and President @EmmanuelMacron attended the India-France CEO Forum in Paris. The PM highlighted India's rise as a global economic powerhouse fueled by stability, reforms and innovation. pic.twitter.com/cr6Ge3MmlT