இந்தியாவின் முன்னேற்றத்திற்கு ஒரு திருப்புமுனையாக 2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது என பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய நாட்டின் பயணத்தை விரைவுபடுத்துவதில் அதன் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு, பொம்மை உற்பத்தி, விவசாயம், காலணிகள், உணவு பதப்படுத்துதல் மற்றும் முறைசாரா தொழிலாளர் பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் புதுமை, தொழில்முனைவு மற்றும் நிலையான வளர்ச்சிக்கு மத்திய பட்ஜெட் வழி வகுக்கிறது.
MyGov-ன் சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவுக்கு பதிலளித்த பிரதமர் மோடி கூறியிருப்பதாவது;
“வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைப்பதற்கான நமது கூட்டுத் தீர்மானத்திற்கு உத்வேகம் அளிக்கும் பட்ஜெட்! #VixitBharatBudget2025”
***
(Release ID: 2098663)
PKV/RR/KR
A Budget that will add momentum towards our collective resolve of building a Viksit Bharat! #ViksitBharatBudget2025 https://t.co/kDONUwP4b2
— Narendra Modi (@narendramodi) February 1, 2025