Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

2025-ஆம் ஆண்டுக்கான பத்ம விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் வாழ்த்து


2025-ஆம் ஆண்டுக்கான பத்ம விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு  பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். விருது பெறும் ஒவ்வொருவரும் கடின உழைப்பு, ஆர்வம் மற்றும் புதுமை ஆகியவற்றிற்கு இணையாக இருப்பதாகவும், இது எண்ணற்றவர்களிடையே நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமூக ஊடக எக்ஸ் தள பதிவொன்றில் அவர் குறிப்பிட்டதாவது:

“பத்ம விருது அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்! அவர்களின் அசாதாரண சாதனைகளை கௌரவித்து கொண்டாடுவதில் இந்தியா பெருமிதம் கொள்கிறது. அவர்களின் அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும் உண்மையிலேயே ஊக்கமளிக்கின்றன. ஒவ்வொரு விருது பெறுபவரும் கடின உழைப்பு, ஆர்வம் மற்றும் புதுமைக்கு இணையாக இருக்கிறார்கள், இது எண்ணற்ற மக்களிடையே நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறப்புக்காக பாடுபடுவதன் மதிப்பையும், தன்னலமின்றி சமூகத்திற்கு சேவை செய்வதன் மதிப்பையும் அவை நமக்குக் கற்பிக்கின்றன.
https://www.padmaawards.gov.in/Document/pdf/notifications/PadmaAwards/2025.pdf” 

**********

BR/KV