உலகின் 31 ஈரநில அங்கீகாரம் பெற்ற நகரங்களின் பட்டியலில் இந்தூர் மற்றும் உதய்பூர் இணைந்ததற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த அங்கீகாரம் நிலையான வளர்ச்சி, இயற்கை மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக்கு இடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கான இந்தியாவின் வலுவான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவின் பதிவிற்குப் பதிலளித்துள்ள பிரதமர் கூறியிருப்பதாவது:
“இந்தூர் மற்றும் உதய்பூருக்கு வாழ்த்துக்கள்! இந்த அங்கீகாரம் நிலையான வளர்ச்சி, இயற்கை மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக்கு இடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கான நமது வலுவான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. நமது தேசம் முழுவதும் பசுமையான, தூய்மையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நகர்ப்புறங்களை உருவாக்குவதில் தொடர்ந்து உழைக்க இந்த சாதனை அனைவரையும் ஊக்குவிக்கட்டும்’’.
***
PKV/DL
Congratulations to Indore and Udaipur! This recognition reflects our strong commitment to sustainable development and nurturing harmony between nature and urban growth. May this feat inspire everyone to keep working towards creating greener, cleaner and more eco-friendly urban… https://t.co/yaDGG4Dtea
— Narendra Modi (@narendramodi) January 25, 2025