Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அதிபர் பிரபோவோ சுபியாண்டோவை வரவேற்பதில் இந்தியா பெருமை கொள்கிறது: பிரதமர்


இந்தோனேசியாவின் அதிபர் திரு பிரபோவோ சுபியாண்டோவை  வரவேற்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடிஇந்தியா-இந்தோனேசியா இடையிலான விரிவான கூட்டுறவின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்தோனேசியா எங்கள் கிழக்குக் கொள்கையின் மையத்தில் உள்ளது என்றும், இந்தோனேசியாவின் பிரிக்ஸ் உறுப்பினர் பொறுப்பை  இந்தியா வரவேற்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்த ஒரு சமூக ஊடகப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது;

அதிபர் பிரபோவோ சுபியாண்டோவை வரவேற்பதில் இந்தியா பெருமை கொள்கிறது.

நாம் நமது  முதல் குடியரசு தினத்தை கொண்டாடும் போது, இந்தோனேஷியா விருந்தினராக இருந்தது, இப்போது, இந்தியா குடியரசாகி 75 ஆண்டுகள் நிறைவடையும் போது, அதிபர்  சுபியாண்டோ கொண்டாட்டங்களில் கலந்து கொள்கிறார். இந்தியா-இந்தோனேசியா இடையிலான விரிவான  கூட்டாண்மையின் பல்வேறு அம்சங்களை நாங்கள் விவாதித்தோம்’’.

பாதுகாப்பு, பாதுகாப்பு உற்பத்தி, வர்த்தகம், நிதி நுட்பம் , செயற்கை நுண்ணறிவு  மற்றும் பல துறைகளில் இந்தியா-இந்தோனேசியா உறவுகளை ஆழப்படுத்துவதற்கான வழிகள் குறித்து நாங்கள் விவாதித்தோம். உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற துறைகளிலும் நாங்கள் நெருக்கமாக பணியாற்றுவதை  எதிர்பார்க்கிறோம்’’.

இந்தியாவும் இந்தோனேசியாவும் பல்வேறு பலதரப்பு தளங்களிலும் நெருக்கமாக ஒத்துழைக்கின்றன. இந்தோனேஷியா எங்கள் கிழக்குக் கொள்கையின் மையத்தில் உள்ளது, இந்தோனேசியாவின் பிரிக்ஸ் உறுப்பினஃ பொறுப்பை  நாங்கள் வரவேற்கிறோம்’’.

***

PKV/DL