Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய பெண் குழந்தைகள் தினமான இன்று, பெண் குழந்தைகளுக்கு தொடர்ந்து அதிகாரம் அளிக்க உறுதி ஏற்போம்: பிரதமர்


தேசிய பெண் குழந்தைகள் தினமான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி, பெண் குழந்தைகளுக்கு தொடர்ந்து அதிகாரம் அளித்து அவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை உறுதி செய்வதில் அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:

“தேசிய பெண் குழந்தைகள் தினமான இன்று, பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிப்பதிலும், அவர்களுக்கு பரந்த அளவிலான வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதிலும் எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம். அனைத்து துறைகளிலும் பெண் குழந்தைகளின் சாதனைகளால் இந்தியா பெருமை கொள்கிறது. அவர்களின் சாதனைகள் நம் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன.”

“பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிக்க, கல்வி, தொழில்நுட்பம், திறன்கள், சுகாதாரம் போன்ற துறைகளில் எங்களது அரசு அதிக கவனம் செலுத்தியுள்ளது. பெண் குழந்தைகளுக்கு எதிராக எந்தப் பாகுபாடும் காட்டப்படுவதில்லை என்பதை நிலைநாட்டுவதில் நாங்கள் உறுதிப்பாட்டுடன் செயல்படுகிறோம்.”

***

(Release ID: 2095662)

TS/PLM/AG/KR