Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் மற்றும் உச்சிமாநாடு குறித்து திரு அமிதாப் காந்த் எழுதிய புத்தகத்திற்கு பிரதமர் பாராட்டு


இந்தியாவின் ஜி-20 தலைமைப் பொறுப்பு மற்றும் உச்சிமாநாடு 2023 குறித்து புத்தகம் எழுத திரு அமிதாப் காந்த் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். ஒரு சிறந்த பூமியை உருவாக்குவதில் மனிதகுலத்தை மையமாகக் கொண்ட வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிகள் குறித்த தெளிவான கண்ணோட்டத்தை அவர் வழங்கியுள்ளார் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு அமிதாப் காந்த் எழுதிய பதிவுக்கு பதிலளித்து திரு மோடி  கூறியிருப்பதாவது:

“இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் மற்றும் 2023-ம் ஆண்டின் உச்சிமாநாடு பற்றி எழுதுவதற்கான உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது. இது பூமியை மேம்படுத்துவதில் மனிதனை மையமாகக் கொண்ட வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும் நமது முயற்சிகள் குறித்த தெளிவான கண்ணோட்டத்தை வழங்குகிறது.”

***

(Release ID: 2094813)

TS/PKV/AG/KR