Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பொம்மை உற்பத்தித் துறையில் நமது முன்னேற்றமானது நமது தற்சார்பு முயற்சியை அதிகரித்துள்ளதுடன், பாரம்பரியத்தையும், தொழில்முனைவையும் பிரபலப்படுத்தியுள்ளது: பிரதமர்


பொம்மை உற்பத்தித் துறையில் அரசு அடைந்துள்ள முன்னேற்றம் தற்சார்புக்கான முயற்சியை ஊக்குவித்துள்ளது என்றும், பாரம்பரியத்தையும், தொழில்முனைவை பிரபலப்படுத்தியுள்ளது என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மனதின் குரல் அண்மைத் தகவல்  குறித்த பதிவுக்கு அவர் பதிலளித்துள்ளார்:

இந்தியா முழுவதும் பொம்மை உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் கூட்டு முயற்சிகளின் ஆற்றல் குறித்து மனதின் குரல்#MannKiBaat நிகழ்ச்சியின் அத்தியாயம் ஒன்றின் போது நாம் பேசியிருந்தோம். அதில் நாம் நிறைய தகவல்களை பேசி இருந்தோம் .

இந்தத் துறையில் ஏற்பட்டுள்ள நமது முன்னேற்றங்கள் தற்சார்புக்கான நமது முயற்சியை அதிகரித்துள்ளன. பாரம்பரியங்களையும், தொழில் முனைவையும் பிரபலப்படுத்தியுள்ளன.”

***

(Release ID: 2094503)

TS/IR/AG/KR