Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகா கும்பமேளா இந்தியாவின் காலத்தால் அழியாத ஆன்மீக பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுவதாகவும், நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தை கொண்டாடுவதாகவும் உள்ளது: பிரதமர்


பிரயாக்ராஜில் மகா கும்பமேளா 2025 தொடங்குவதை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரதத்தின் மாண்புகளையும், கலாச்சாரத்தையும் போற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு இது மிகவும் சிறப்பான நாள் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும், மகா கும்பமேளா, இந்தியாவின் காலம் கடந்த ஆன்மீக பாரம்பரியத்தை உள்ளடக்கியுள்ளது மற்றும் நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டாடுகிறது.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

“பாரதத்தின்  விழுமியங்களையும், கலாச்சாரத்தையும் போற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு இது ஒரு மிகவும் சிறப்பு வாய்ந்த நாள்!

,பிரயாக்ராஜில் தொடங்குகிற மகா கும்பமேளா 2025  எண்ணற்ற மக்களை நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் புனிதமான சங்கமத்தில் ஒன்றிணைக்கிறது. இந்தியாவின் காலம் கடந்த ஆன்மீக பாரம்பரியத்தை உள்ளடக்கிய மகா கும்பமேளா, நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டாடுகிறது.”

***

(Release ID: 2092354)
TS/BR/RR