Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

 முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர் இரங்கல்


 

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். “தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான டாக்டர். மன்மோகன் சிங்கின் இழப்பிற்காக இந்தியா துக்கம் அனுசரிக்கிறது” என்று திரு மோடி கூறினார்.  டாக்டர். மன்மோகன் சிங், எளிமையான பின்னணியிலிருந்து, பொருளாதார நிபுணராக உயர்ந்தார் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.  நமது பிரதமராக, டாக்டர் மன்மோகன் சிங், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த விரிவான முயற்சிகளை மேற்கொண்டார் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங்கின் இழப்பிற்காக இந்தியா துக்கம் அனுசரிக்கிறது. எளிமையான பின்னணியிலிருந்து, மதிப்பிற்குரிய பொருளாதார நிபுணராக அவர் உயர்ந்தார். நிதியமைச்சர் உட்பட பல்வேறு அரசு பதவிகளிலும் அவர் பணியாற்றினார், பல ஆண்டுகளாக நமது பொருளாதாரக் கொள்கையில் வலுவான முத்திரையைப் பதித்தார். நாடாளுமன்றத்தில் அவரது தலையீடுகளும் மதிநுட்பமானதாக இருந்தன. நமது பிரதமராக, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த விரிவான முயற்சிகளை மேற்கொண்டார்.”

டாக்டர். மன்மோகன் சிங் பிரதமராகவும், நான் குஜராத் முதல்வராகவும் இருந்தபோது, நாங்கள் அடிக்கடி தொடர்பு கொண்டோம். ஆட்சி தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் விரிவான விவாதங்களை நடத்துவோம். அவரது ஞானமும் பணிவும் எப்போதும் காணக்கூடியதாக இருந்தது.

துயரமான இந்த நேரத்தில், டாக்டர் மன்மோகன் சிங்கின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற  ஆதரவாளர்களுக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.”

***

TS/BR/KV