Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை (சி.பி.சி.ஐ) நடத்திய  கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் தாம் கலந்து கொண்ட சில காட்சிகளையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:

“அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

இயேசு கிறிஸ்துவின் போதனைகள் அனைவருக்கும் அமைதி மற்றும் செழிப்புக்கான பாதையைக் காட்டட்டும்.

சி.பி.சி.ஐ.யில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் சிறப்பம்சங்களை இங்கே பதிவிடுகிறேன்…”

—-

RB/DL