Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரபல திரைப்பட இயக்குனர் திரு. ஷியாம் பெனகல் மறைவுக்கு பிரதமர் இரங்கல்


புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர்  திரு. ஷியாம் பெனகல் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.  

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

இந்திய திரைப்படத்துறையில் தனது கதை சொல்லல் மூலம் அறிவார்ந்த தாக்கத்தை ஏற்படுத்திய திரு ஷியாம் பெனகலின் மறைவால் மிகுந்த வருத்தம் அடைந்தேன். அவரது படைப்புகள் பல்வேறு தரப்பு மக்களால் தொடர்ந்து போற்றப்படும். அன்னாரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.”

***

(Release ID: 2087481)
TS/BR/RR