Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குவைத்தில் நடைபெற்ற ‘ஹலா மோடி’ நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்

குவைத்தில் நடைபெற்ற ‘ஹலா மோடி’ நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்



குவைத் நகரில் உள்ள ஷேக் சாத் அல் அப்துல்லா உள்விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற ‘ஹலா மோடி’ என்ற சிறப்பு நிகழ்ச்சியில் திரண்டிருந்த இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். குவைத்தில் உள்ள பல்வேறு சமூகத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாட்டினர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பிரதமரை, இந்தய  சமூகத்தினர் மிகுந்த உற்சாகத்துடனும் அன்புடனும் வரவேற்றனர். கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், இந்திய-குவைத் உறவு இந்திய சமூகத்தினரால் ஆழமாக வளப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் குறிப்பிட்டார். குவைத் அமீரின் அன்பான அழைப்புக்கு நன்றி தெரிவித்த பிரதமர், 43 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் குவைத் வந்திருப்பதாகவும், பழைமையான நட்புறவை வலுப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

குவைத்தின் வளர்ச்சிக்கு சமூகத்தின் கடின உழைப்பு, சாதனை மற்றும் பங்களிப்பை பிரதமர் பாராட்டினார், இது உள்ளூர் அரசு மற்றும் சமூகத்தால் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றார். இந்திய சமூகத்தின் நலனுக்காக குவைத் தலைமைக்கு அவர் நன்றி தெரிவித்தார். குவைத் மற்றும் வளைகுடாவின் பிற பகுதிகளில் உள்ள இந்திய தொழிலாளர்களுக்கு ஆதரவளிப்பதில் இந்தியாவின் வலுவான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், மின்னணு புலம்பெயர்  தளம் போன்ற அரசால் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப அடிப்படையிலான முன்முயற்சிகள் குறித்து அவர் பேசினார்.

“விஸ்வபந்து” என்ற முறையில், உலகத்தின் நண்பனாக இந்தியாவின் அணுகுமுறையை பிரதமர் கோடிட்டுக் காட்டினார். இந்தியாவின் விரைவான முன்னேற்றம் மற்றும் மாற்றம், குறிப்பாக தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மற்றும் நீடித்த தன்மை ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்தார். உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக இருப்பதைத் தவிர, நிதிநுட்பத் துறையில் உலகத் தலைமையாகவும், புத்தொழில் நிறுவனப்  பிரிவில் மூன்றாவது பெரிய உலகளாவிய செயற்பாட்டாளராகவும், உலகளவில் டிஜிட்டல் முறையில் அதிகம் இணைக்கப்பட்ட சமூகங்களிலும் இந்தியாவும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். நிதி உள்ளடக்கம், பெண்கள் தலைமையிலான வளர்ச்சி மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி போன்ற சாதனைகளை அவர் எடுத்துரைத்தார். வளர்ந்த பாரதம்  மற்றும் புதிய குவைத் ஆகிய இரு நாடுகளின் பகிரப்பட்ட விருப்பங்களை பிரதிபலிக்கும் வகையில் பேசிய பிரதமர், இந்தியாவும் குவைத்தும் இணைந்து பணியாற்ற ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்று அடிக்கோடிட்டுக் காட்டினார். இந்தியாவின் திறன்கள் மற்றும் புதுமைகள் இரு நாடுகளுக்கும் இடையே புதிய கூட்டாண்மைகளை வளர்க்கும்.

2025 ஜனவரியில் இந்தியாவில் நடைபெறவுள்ள வெளிநாடுவாழ் இந்தியர்கள் தினம் மற்றும் மகா கும்பமேளாவில் பங்கேற்குமாறு வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

************

BR/KV