Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஜூனியர் மகளிர் ஹாக்கி அணிக்கு பிரதமர் பாராட்டு


ஆசியக் கோப்பை போட்டியில் பட்டம் வென்ற இந்திய ஜூனியர் மகளிர் ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அணியின் அபரிமிதமான மன உறுதியையும் அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார்.

 

சமூக ஊடக  எக்ஸ் தள பதிவில் அவர் கூறியுள்ளதாவது:

 

“ஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஜூனியர் மகளிர் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள். அணி மகத்தான மன உறுதியையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியது. குறிப்பாக, இளைஞர்களிடையே ஹாக்கி மீதான ஆர்வம் அதிகரித்து வருவதை இந்த வெற்றி காட்டுகிறது. வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள்.”

 

TS/BR/KR

***