Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

2024 டிசம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் தில்லியில் தலைமைச் செயலாளர்களின் நான்காவது தேசிய மாநாட்டிற்கு பிரதமர் தலைமை தாங்குகிறார்


பிரதமர் திரு நரேந்திர மோடி வரும் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தில்லியில் தலைமைச் செயலாளர்களின் நான்காவது தேசிய மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார். இது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டாண்மையை மேலும் அதிகரிப்பதற்கான மற்றொரு முக்கியப் படியாக இருக்கும்.

 

ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி முறையை வலுப்படுத்தவும், விரைவான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை அடைய மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை உறுதி செய்யவும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் தலைமைச் செயலாளர்கள் மாநாடு உந்தப்படுகிறது. இந்த மாநாடு கடந்த 3 ஆண்டுகளாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. முதல் தலைமைச் செயலாளர்கள் மாநாடு 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் தர்மசாலாவில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது மாநாடு முறையே 2023 ஜனவரி  மற்றும் டிசம்பர் மாதங்களில் புதுதில்லியில் நடைபெற்றது.

 

இன்று தொடங்கி 15-ம் தேதி வரை நடைபெறவுள்ள மூன்று நாள் மாநாடு, மாநிலங்களுடன் கூட்டாக ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கான பொதுவான வளர்ச்சித் திட்டம் மற்றும் செயல் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துவதை வலியுறுத்தும். தொழில்முனைவை ஊக்குவித்தல், திறன் மேம்பாட்டு முயற்சிகளை மேம்படுத்துதல், ஊரக மற்றும் நகர்ப்புற மக்களுக்கு நீடித்த வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் மக்கள் தொகை பங்கீட்டைப் பயன்படுத்துவதற்கான கூட்டு நடவடிக்கைக்கு இது அடித்தளம் அமைக்கும்.

 

மத்திய அமைச்சகங்கள்/ துறைகள், நித்தி ஆயோக், மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் மற்றும் துறைசார் வல்லுநர்கள் இடையேயான விரிவான விவாதங்களின் அடிப்படையில், நான்காவது தேசிய மாநாடு, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவை பின்பற்ற வேண்டிய சிறந்த நடைமுறைகள் மற்றும் உத்திகளை உள்ளடக்கிய தொழில்முனைவோர், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவித்தல் மக்கள்தொகை பங்கீட்டை மேம்படுத்துதல்என்ற கருப்பொருளில் கவனம் செலுத்தும்.

 

மேலோட்டமான இந்தக் கருப்பொருளின் கீழ், உற்பத்தி, சேவைகள், கிராமப்புறம், நகர்ப்புறம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் வட்டப் பொருளாதாரம் ஆகிய ஆறு பகுதிகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

 

வளர்ச்சியடைந்த பாரதம் திட்டத்திற்கான தொழில்நுட்பம், பொருளாதார வளர்ச்சி மையங்களாக நகரங்களை உருவாக்குதல், முதலீட்டுக்கான மாநிலங்களில் பொருளாதார சீர்திருத்தங்கள், திறன் மேம்பாடு ஆகியவற்றை மிஷன் கர்மயோகி மூலம் உருவாக்குதல் ஆகியவை பற்றிய நான்கு சிறப்பு அமர்வுகள் நடத்தப்படும்.

 

இது தவிர, விவசாயத்தில் தற்சார்பு: சமையல் எண்ணெய்கள் மற்றும் பருப்பு வகைகள், வயது முதிர்ந்தோர் பராமரிப்பு பொருளாதாரம், பிரதமரின் சூர்ய வீடு மின்சாரத் திட்டத்தை செயல்படுத்துதல், பாரதிய ஞான பரம்பரை ஆகியவை குறித்து கவனம் செலுத்தும் விவாதங்கள் நடைபெறும்.

 

மாநிலங்களுக்கிடையேயான பரஸ்பர கற்றலை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு கருப்பொருளின் கீழும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் சிறந்த நடைமுறைகளும் இந்த மாநாட்டில் முன்வைக்கப்படும்.

 

தலைமைச் செயலாளர்கள், அனைத்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் மூத்த அதிகாரிகள், துறைசார் வல்லுநர்கள் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.

 

***

(Release ID: 2084084)
VL/PKV/RR