கர்நாடக முன்னாள் முதலமைச்சர் திரு எஸ். எம். கிருஷ்ணா மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் கவனம் செலுத்தியதற்காக அறியப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க தலைவர் என்று திரு மோடி அவரைப் பாராட்டியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
“திரு எஸ்.எம்.கிருஷ்ணா அவர்கள் ஒரு குறிப்பிடத்தக்க தலைவர். அனைத்துத் தரப்பு மக்களாலும் போற்றப்பட்டவர். மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த அவர் எப்போதும் அயராது உழைத்தார். கர்நாடகாவின் முதல்வராக இருந்த காலத்தில், குறிப்பாக உள்கட்டமைப்பு வளர்ச்சியில் கவனம் செலுத்தியதற்காக அவர் அன்புடன் நினைவுகூரப்படுகிறார். திரு எஸ்.எம்.கிருஷ்ணா அவர்கள் ஒரு சிறந்த வாசகராகவும் சிந்தனையாளராகவும் இருந்தார்.
“திரு எஸ்.எம்.கிருஷ்ணா அவர்களுடன் கலந்துரையாட பல ஆண்டுகளில் எனக்குப் பல வாய்ப்புகள் கிடைத்தன. அந்த உரையாடல்களை நான் எப்போதும் போற்றுவேன். அவரது மறைவு எனக்கு ஆழ்ந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.”
***** *****
(Release ID: 2082557)
TS/SMB/KV/KR
Shri SM Krishna Ji was a remarkable leader, admired by people from all walks of life. He always worked tirelessly to improve the lives of others. He is fondly remembered for his tenure as Karnataka’s Chief Minister, particularly for his focus on infrastructural development. Shri… pic.twitter.com/Wkw25mReeO
— Narendra Modi (@narendramodi) December 10, 2024
I have had many opportunities to interact with Shri SM Krishna Ji over the years, and I will always cherish those interactions. I am deeply saddened by his passing. My condolences to his family and admirers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) December 10, 2024