தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் முன்முயற்சிக்கு ஆதரவு அளித்ததற்காக, கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். நேற்றைய மனதின் குரல் நிகழ்ச்சியில், கயானாவில் உள்ள இந்திய சமூகத்தினருக்கு திரு மோடி மீண்டும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவுக்கு பிரதமர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
“உங்கள் ஆதரவு எப்போதும் போற்றப்படும். எனது #MannKiBaat நிகழ்ச்சியில் இதைப் பற்றி பேசினேன். அதே நிகழ்ச்சியில் கயானாவில் உள்ள இந்திய சமூகத்தினரையும் பாராட்டியுள்ளேன்”.
@DrMohamedIrfaa1
@presidentaligy“
***
(Release ID: 2076727)
TS/MM/RR/KR
Your support will always be cherished. I talked about it during my #MannKiBaat programme. Also appreciated the Indian community in Guyana in the same episode. @DrMohamedIrfaa1 @presidentaligy https://t.co/1pUrdJVsFl
— Narendra Modi (@narendramodi) November 25, 2024