பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு டொமினிகா அதிபர் திருமதி சில்வானி பர்டன் அந்நாட்டின் மிக உயரிய தேசிய விருதான “டொமினிகா கௌரவ விருதை” வழங்கினார். ராஜதந்திரம், கோவிட் 19 பெருந்தொற்றின் போது டொமினிகாவுக்கு அளித்த ஆதரவு, இந்தியா மற்றும் டொமினிகா உறவுகளை வலுப்படுத்துவதில் பிரதமரின் உறுதிப்பாடு ஆகியவற்றிற்காக, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டது. டொமினிக்கா பிரதமர் திரு. ரூஸ்வெல்ட் ஸ்கெரிட்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலி, பார்படோஸ் பிரதமர் திரு மியா அமோர் மோட்லி, கிரெனடா பிரதமர் திரு. டிக்கோன் மிட்செல், செயிண்ட் லூசியா பிரதமர் திரு பிலிப் ஜே. பியரி, ஆன்டிகுவா மற்றும் பார்புடா பிரதமர் திரு. காஸ்டன் பிரவுன் ஆகியோரும் இந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்றனர்.
இந்தக் கவுரவத்தை இந்திய மக்களுக்கும், இந்தியா மற்றும் டொமினிகா இடையேயான வலுவான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளுக்கும் அர்ப்பணிப்பதாக பிரதமர் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பிணைப்பு வரும் ஆண்டுகளில் தொடர்ந்து வளர்ந்து வலுவடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கயானாவின் ஜார்ஜ்டவுனில் நடைபெற்ற இரண்டாவது இந்தியா-கரிகாம் (கரீபியன் சமுதாயம் மற்றும் பொதுச்சந்தை) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்த விருது வழங்கும் விழா நவம்பர் 20-ந் தேதி நடைபெற்றது.
***
(Release ID: 2075290)
TS/PKV/RR/KR
Honoured to be conferred with highest national award by Dominica. I dedicate it to the 140 crore people of India. https://t.co/ixOaIzD8gF
— Narendra Modi (@narendramodi) November 20, 2024