Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாரத ரத்னா நானாஜி தேஷ்முக் பிறந்த நாளையொட்டி அவருக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்


பாரத ரத்னா நானாஜி தேஷ்முக் பிறந்த நாளையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு இன்று மரியாதை செலுத்தினார். இந்தியாவின் கிராமப்புற மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் திரு தேஷ்முக் மேற்கொண்ட அர்ப்பணிப்பையும்  சேவையையும்  திரு மோடி நினைவுகூர்ந்து பாராட்டினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

“பாரத ரத்னா நானாஜி தேஷ்முக் பிறந்த நாளையொட்டி நாட்டுமக்கள் சார்பில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். கிராம மக்களுக்கு, குறிப்பாக நாட்டின் பின்தங்கிய பிரிவினருக்கு அதிகாரம் அளிப்பதற்காக அவரது அர்ப்பணிப்பும் சேவை உணர்வு எப்போதும் நினைவுகூரப்படும்.”

***

SMB/DL