Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மும்பை மெட்ரோ ரயில் பாதை 3-இல் ஆரே ஜே.வி.எல்.ஆர் முதல் பி.கே.சி வரையிலான  பிரிவு தொடங்கப்பட்டதற்காக மும்பை மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

மும்பை மெட்ரோ ரயில் பாதை 3-இல் ஆரே ஜே.வி.எல்.ஆர் முதல் பி.கே.சி வரையிலான  பிரிவு தொடங்கப்பட்டதற்காக மும்பை மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


மும்பை மெட்ரோ ரயில் பாதை 3-இன்  முதல் கட்டத்தின் கkீழ் ஆரே ஜே.வி.எல்.ஆர் முதல் பி.கே.சி பிரிவு வரையிலான வழித்தடத்தை தொடங்கி வைத்ததை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி மும்பை மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மும்பை மெட்ரோ ரயில் கட்டமைப்பை விரிவுபடுத்துவது மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை ஊக்குவிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

சமூக ஊடக எக்ஸ் தள  பதிவொன்றில் அவர் குறிப்பிட்டதாவது:

“மும்பையின் மெட்ரோ இணைப்பு விரிவடைகிறது, மக்களின் ‘வாழ்க்கையை எளிதாக்குகிறது’! மும்பை மெட்ரோ லைன் 3-இன் முதல் கட்டத்தின் கீழ் ஆரே ஜே.வி.எல்.ஆர் முதல் பி.கே.சி வரையிலான பிரிவு திறந்து வைக்கப்பட்டதற்காக மும்பை மக்களுக்கு வாழ்த்துகள்.”

மாணவர்கள், இளைஞர்கள், முக்யமந்திரி மஜி லட்கி பஹின் யோஜனா பயனாளிகள் மற்றும் மெட்ரோ ரயில் சேவையை உருவாக்கிய தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
இது பற்றி எக்ஸ் பதிவில், அவர் தெரிவித்ததாவது:

“மாணவர்கள், இளைஞர்கள், முக்யமந்திரி மஜி லட்கி பஹின் யோஜனாவின் பயனாளிகள் மற்றும் மெட்ரோவை உருவாக்கிய தொழிலாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.”

******************* 

BR/KV