வணக்கம்!
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களின் மதிப்பிற்குரிய இயக்குநர்களே, தனிச்சிறப்பு வாய்ந்த மூத்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள், ஆராய்ச்சியாளர்களே, மாணவர்களே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே!
இன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில், பாரதத்தின் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையைக் குறிக்கிறது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், 21-ம் நூற்றாண்டு பாரதம் எவ்வாறு முன்னேறுகிறது என்பதற்கு இது ஒரு சான்றாகும். பாரதம் இன்று எல்லையற்ற சாத்தியக்கூறுகளின் விரிவில், புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. நமது விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் மூன்று பரம் ருத்ர சூப்பர் கம்ப்யூட்டர்களை வெற்றிகரமாக உருவாக்கியிருக்கிறார்கள். இந்த அதிநவீன சூப்பர் கம்ப்யூட்டர்கள், தில்லி, புனே மற்றும் கொல்கத்தாவில் நிறுவப்பட்டுள்ளன. கூடுதலாக, அர்கா மற்றும் அருணிகா ஆகிய இரண்டு உயர் செயல்திறன் கணினி அமைப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில், நாட்டின் அறிவியல் சமூகத்தினர், பொறியாளர்கள் மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதர சகோதரிகளே,
எனது மூன்றாவது பதவிக்காலத்தின் தொடக்கத்தில், தற்போதுள்ள 100 நாள் கட்டமைப்பைத் தாண்டி, இளைஞர்களுக்கு கூடுதலாக 25 நாட்கள் வழங்குவதாக உறுதியளித்தேன். அந்த அர்ப்பணிப்புக்கு இணங்க, இந்த சூப்பர் கம்ப்யூட்டர்களை இன்று நம் நாட்டின் இளைஞர்களுக்கு அர்ப்பணிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மேம்பட்ட அமைப்புகள், பாரதத்தின் இளம் விஞ்ஞானிகள் தங்கள் சொந்த நாட்டிலேயே அதிநவீன தொழில்நுட்பத்தை அணுகுவதை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும். இன்று தொடங்கப்பட்ட மூன்று சூப்பர் கம்ப்யூட்டர்கள், இயற்பியல், புவி அறிவியல் மற்றும் அண்டவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேம்பட்ட ஆராய்ச்சிக்கு உதவும் – உலக அரங்கில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் துறைகள்.
நண்பர்களே,
டிஜிட்டல் புரட்சியின் இந்த சகாப்தத்தில், கணினி சக்தி தேசிய வலிமைக்கு ஒத்ததாக மாறிவிட்டது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பொருளாதார வளர்ச்சி, தேசிய நீடித்த திறன், பேரிடர் மேலாண்மை, வாழ்க்கையை எளிதாக்குதல் அல்லது வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல் போன்ற ஆராய்ச்சி வாய்ப்புகளாக இருந்தாலும், தொழில்நுட்பம் மற்றும் கணினித் திறன் ஆகியவற்றால் தொடப்படாத துறையே இல்லை. இதுதான் தொழில்துறை 4.0-ல் பாரதத்தின் வெற்றிக்கு அடித்தளமாகும். இந்தப் புரட்சிக்கு, நமது பங்களிப்பு வெறும் பிட்கள் மற்றும் பைட்டுகளில் இருக்கக்கூடாது, ஆனால் டெராபைட்டுகள் மற்றும் பெட்டாபைட்டுகளில் இருக்க வேண்டும். நாம் சரியான திசையில், சரியான வேகத்தில் முன்னேறி வருகிறோம் என்பதற்கு, இன்றைய சாதனை சான்றாக உள்ளது.
நண்பர்களே,
இன்றைய புதிய இந்தியா, வளர்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் உலகின் பிற பகுதிகளுடன் போட்டியிடுவதோடு திருப்தியடைந்துவிடவில்லை. இந்த புதிய இந்தியா, தனது அறிவியல் ஆராய்ச்சியின் மூலம் மனிதகுலத்திற்கு சேவை செய்வதை ஒரு பொறுப்பாக கருதுகிறது. இதுதான் நமது கடமை: ‘ஆராய்ச்சியின் மூலம் தற்சார்பு‘. தற்சார்புக்கான அறிவியல் நமது வழிகாட்டும் தாரக மந்திரமாக மாறியுள்ளது. இதற்காக, டிஜிட்டல் இந்தியா, தொடங்கிடு இந்தியா, இந்தியாவில் உற்பத்தி செய்வோம் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முன்முயற்சிகளை நாங்கள் தொடங்கியுள்ளோம். பாரதத்தின் எதிர்கால சந்ததியினரிடம் அறிவியல் ஆர்வத்தை வளர்க்க, பள்ளிகளில் 10,000-க்கும் மேற்பட்ட அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கூடுதலாக, STEM பாடங்களில் கல்விக்கான உதவித்தொகை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.1 லட்சம் கோடி ஆராய்ச்சி நிதியம் அறிவிக்கப்பட்டுள்ளது. 21-ம் நூற்றாண்டின் உலகத்தை அதன் கண்டுபிடிப்புகளால் மேம்படுத்தவும், உலகளாவிய சமூகத்தை வலுப்படுத்தவும் உதவுவதே எங்கள் குறிக்கோள்.
நண்பர்களே,
இன்று, பாரதம் புதிய முடிவுகளை எடுக்காத அல்லது புதிய கொள்கைகளை உருவாக்காத துறைகளே இல்லை. விண்வெளி ஆராய்ச்சியில் பாரதம் இப்போது ஒரு பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது. இதற்கு ஒரு சிறந்த உதாரணம். மற்ற நாடுகள் பில்லியன் கணக்கான டாலர்களில் சாதித்ததை, நமது விஞ்ஞானிகள் குறைந்த வளங்களைக் கொண்டு சாதித்துள்ளனர். இந்த உறுதியால் உந்தப்பட்டு, நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடு என்ற பெருமையை பாரதம் பெற்றது. அதே தீர்மானத்துடன், பாரதம் இப்போது மிஷன் ககன்யானுக்குத் தயாராகி வருகிறது. “பாரதத்தின் மிஷன் ககன்யான் என்பது விண்வெளியை அடைவது மட்டுமல்ல, நமது அறிவியல் ஆர்வத்தின் எல்லையற்ற உயரத்தை எட்ட உயரும்.” 2035-ம் ஆண்டுக்குள் தனது சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்க பாரதம் இலக்கு நிர்ணயித்துள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். சில நாட்களுக்கு முன்பு, இந்த லட்சிய திட்டத்தின் முதல் கட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்தது.
நண்பர்களே,
குறைக்கடத்திகளும் நவீன வளர்ச்சியின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய அரசு ‘இந்தியா செமிகண்டக்டர் மிஷன்‘ என்ற குறிப்பிடத்தக்க முன்முயற்சியைத் தொடங்கியுள்ளது. குறிப்பிடத்தக்க குறுகிய காலத்தில், நாம் ஏற்கனவே நேர்மறையான விளைவுகளைக் காண்கிறோம். பாரதம் தனது சொந்த குறைக்கடத்தி சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கி வருகிறது. இது உலகளாவிய விநியோகச் சங்கிலியின் முக்கிய பகுதியாக இருக்கும். இன்று, பாரதத்தின் பல பரிமாண அறிவியல் முன்னேற்றங்கள் மூன்று பரம் ருத்ர சூப்பர் கம்ப்யூட்டர்களால் மேலும் வலுசேர்க்கப்படும்.
நண்பர்களே,
ஒரு நாடு துணிச்சலான மற்றும் லட்சிய இலக்குகளை நிர்ணயிக்கும் போது, அது பெரும் வெற்றியை அடைகிறது. சூப்பர் கம்ப்யூட்டரிலிருந்து குவாண்டம் கம்ப்யூட்டிங் வரையிலான பாரதத்தின் பயணம் இந்த தொலைநோக்கு அணுகுமுறைக்கு ஒரு சான்றாகும். சூப்பர் கம்ப்யூட்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளின் களமாக மட்டுமே கருதப்பட்ட ஒரு காலம் இருந்தது. இருப்பினும், 2015 -ம் ஆண்டில், நாங்கள் தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷனை தொடங்கினோம், இன்று இந்தியா சூப்பர் கம்ப்யூட்டர் துறையில் உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டியிடுகிறது. ஆனால், நாங்கள் இங்கே நிறுத்த மாட்டோம். குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற தொழில்நுட்பங்களில் பாரதம் ஏற்கனவே முன்னணியில் உள்ளது. குவாண்டம் கம்ப்யூட்டிங்கில் இந்தியாவின் திறன்களை மேம்படுத்துவதில், நமது தேசிய குவாண்டம் இயக்கம் முக்கியப் பங்கு வகிக்கும். இந்த புரட்சிகர தொழில்நுட்பம் எதிர்காலத்தில் உலகை கடுமையாக மாற்றும், தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி, எம்.எஸ்.எம்.இ மற்றும் ஸ்டார்ட்அப் போன்ற துறைகளில் முன்னோடியில்லாத மாற்றங்களைக் கொண்டுவந்து, புதிய வாய்ப்புகளை உருவாக்கும். பாரதம் தலைமை தாங்கி உலகிற்கு புதிய திசையை வழங்க உறுதியாக உள்ளது. நண்பர்களே, “அறிவியலின் உண்மையான முக்கியத்துவம் கண்டுபிடிப்பு மற்றும் வளர்ச்சியில் மட்டுமல்ல, மிகவும் பின்தங்கியவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதிலும் உள்ளது.”
உயர் தொழில்நுட்ப முன்னேற்றங்களை நாம் ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில், இந்தத் தொழில்நுட்பங்கள் ஏழைகளுக்கு அதிகாரமளிக்கும் ஆதாரமாக மாறுவதையும், நாங்கள் உறுதி செய்கிறோம். நமது யுபிஐ நடைமுறையால் எடுத்துக்காட்டப்பட்ட பாரதத்தின் டிஜிட்டல் பொருளாதாரம் இதற்கு ஒரு பிரகாசமான உதாரணம். சமீபத்தில், பாரதத்தை காலநிலைக்கு ஏற்றதாகவும், பருவநிலைக்கு ஏற்றதாகவும் மாற்ற வேண்டும் என்ற நமது கனவை நனவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ‘மிஷன் மௌசம்‘ திட்டத்தை நாங்கள் தொடங்கினோம். சூப்பர் கம்ப்யூட்டர்கள் மற்றும் உயர் செயல்திறன் கம்ப்யூட்டிங் சிஸ்டம் (HPC) போன்ற, இன்று நாம் கொண்டாடும் சாதனைகள் இறுதியில் நம் நாட்டின் ஏழை மற்றும் கிராமப்புறங்களுக்கு சேவை செய்யும். HPC அமைப்புகள் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம், வானிலையை கணிக்க நாட்டின் அறிவியல் திறன் பெரிதும் மேம்படும். எங்களால் இப்போது மிகவும் துல்லியமான வானிலை தகவல்களை, ஹைப்பர்–லோக்கல் மட்டத்தில் வழங்க முடியும், அதாவது தனிப்பட்ட கிராமங்களுக்குக் கூட துல்லியமான முன்னறிவிப்புகளை வழங்க முடியும். ஒரு சூப்பர் கம்ப்யூட்டர், தொலைதூர கிராமத்தின் வானிலை மற்றும் மண்ணின் தன்மையை பகுப்பாய்வு செய்கிறது என்றால், அது வெறும் அறிவியல் சாதனை மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றமாகும். மிகச்சிறிய அளவிலான விவசாயிகள் கூட உலகின் மிக மேம்பட்ட அறிவை அணுகுவதை சூப்பர் கம்ப்யூட்டர் உறுதி செய்யும்.
இந்த முன்னேற்றம், விவசாயிகளுக்கு, குறிப்பாக மிகவும் தொலைதூர பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு, ஆழமான நன்மைகளைத் தரும், ஏனெனில், அவர்கள் உலகத் தரம் வாய்ந்த அறிவை அணுகுவார்கள். விவசாயிகள், தங்கள் பயிர்களைப் பற்றி மேலும் தகவலறிந்த முடிவுகளை எடுக்க முடியும். மேலும், மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது மிகவும் துல்லியமான தகவல்களிலிருந்து பயனடைவார்கள். விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளைக் குறைப்பதற்கான புதிய வழிகளையும் நாங்கள் கண்டுபிடிப்போம். மேலும் இது, காப்பீட்டுத் திட்டங்களுக்கு சிறந்த அணுகலை வழங்க உதவும். கூடுதலாக, இந்த தொழில்நுட்பம் அனைத்து பங்குதாரர்களுக்கும் பயனளிக்கும் AI மற்றும் இயந்திர கற்றல் மாதிரிகளை உருவாக்க அனுமதிக்கும். உள்நாட்டில் சூப்பர் கம்ப்யூட்டர்களை உருவாக்குவதற்கான எங்கள் திறன், தேசிய பெருமையின் ஆதாரமாக மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் சாதாரண குடிமக்களின் அன்றாட வாழ்க்கையில் மாற்றத்தக்க மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் சகாப்தத்தில், சூப்பர் கம்ப்யூட்டர்கள் முக்கியப் பங்கு வகிக்கும். பாரதம் எப்படி தனது 5ஜி நெட்வொர்க்கை உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ளதைப் போல, பெரிய நிறுவனங்கள் இப்போது இந்தியாவில் மொபைல் போன்களை உற்பத்தி செய்து வருவதால், இது நாட்டின் டிஜிட்டல் புரட்சிக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. இதன் விளைவாக, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்கள் சென்றடைவதை, எங்களால் விரிவுபடுத்த முடிந்தது. அதேபோல், எதிர்கால தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான நமது திறனும், இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் வெற்றியும், சாமானிய மனிதனை எதிர்காலத்திற்கு தயார்படுத்தும். சூப்பர் கம்ப்யூட்டர்கள் அனைத்து துறைகளிலும் புதிய ஆராய்ச்சிகளை நடத்தி, புதிய சாத்தியங்களையும் வாய்ப்புகளையும் உருவாக்கும். பொது மக்கள் இதன் மூலம் நேரடியாக பயனடைவார்கள், அவர்கள் பின்தங்கிவிடாமல் உலகின் பிற பகுதிகளுடன் முன்னேறுவதை உறுதி செய்வார்கள்.
எனது நாட்டின் இளைஞர்களுக்கு – உலகளவில் பாரதம் மிக இளைய நாடாக இருக்கும் போது, எதிர்காலம் அறிவியல், தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் போது, எண்ணற்ற புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளை திறக்கும் ஒரு தருணம் இது. நான் இளைஞர்களுக்கும், நாட்டுமக்கள் அனைவருக்கும் இந்த மகத்தான சாதனைகளுக்காக என் நெஞ்சார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது இளைஞர்களும், ஆராய்ச்சியாளர்களும் அறிவியல் துறையில் புதிய எல்லைகளைக் கண்டறிய இந்த மேம்பட்ட வசதிகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி!
***
(Release ID: 2059268)
SRI/MM/AG/RR
With Param Rudra Supercomputers and HPC system, India takes significant step towards self-reliance in computing and driving innovation in science and tech. https://t.co/ZUlM5EA3yw
— Narendra Modi (@narendramodi) September 26, 2024
आज जिन तीन Supercomputers का लोकार्पण हुआ है... Physics से लेकर Earth Science और Cosmology तक ये Advanced Research में मदद करेंगे: PM @narendramodi pic.twitter.com/N7Em7oSRhj
— PMO India (@PMOIndia) September 26, 2024
आज digital revolution के इस दौर में computing capacity, national capability का पर्याय बनती जा रही है: PM @narendramodi pic.twitter.com/mdqpvh6D8f
— PMO India (@PMOIndia) September 26, 2024
अनुसंधान से आत्मनिर्भरता, Science for Self-Reliance... pic.twitter.com/OwWvnxMZYe
— PMO India (@PMOIndia) September 26, 2024
विज्ञान की सार्थकता केवल आविष्कार और विकास में नहीं, बल्कि सबसे अंतिम व्यक्ति की आशा आकांक्षाओं को...उसकी Aspirations को पूरा करने में है: PM @narendramodi pic.twitter.com/y5ZGCi1gSP
— PMO India (@PMOIndia) September 26, 2024