Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரு சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் வலைதளத்தில் திரு மோடி வெளியிட்டுள்ள  இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

“திரு சீதாராம் யெச்சூரி அவர்களின் மறைவை அறிந்து கவலையடைந்தேன். இடது சாரி கட்சிகளின் முன்னணி ஒளிவிளக்காக  திகழ்ந்த அவர், அரசியல் வேறுபாடுகளைக் களைந்து அனைவரையும் அரவணைத்துச் செல்லும் திறமையைப் பெற்றிருந்தார். செயல்திறன் மிக்க ஒரு நாடாளுமன்றவாதியாகவும் அவர் முத்திரைப் பதித்தார். இந்தத் துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. ஓம் சாந்தி”.

***

PKV/KPG/DL