பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 12,461 கோடி ரூபாய் மொத்த ஒதுக்கீட்டில், நீர்மின் திட்டங்களுக்கான கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்துவதற்கான பட்ஜெட் ஆதரவு திட்டத்தை மாற்றியமைப்பதற்கான மின்சார அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த திட்டம் 2024-25 நிதியாண்டு முதல் 2031-32 நிதியாண்டு வரை செயல்படுத்தப்படும்.
தொலைதூரப் பகுதிகள், மலைப்பகுதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை போன்ற, நீர்மின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மத்திய அரசு பல்வேறு கொள்கை முயற்சிகளை எடுத்து வருகிறது. நீர்மின்சக்தித் துறையை மேம்படுத்தவும், அதை மேலும் லாபகரமானதாக மாற்றவும், பெரிய நீர்மின் திட்டங்களை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களாக அறிவித்தல், நீர் மின்சார கொள்முதல் கடமைகள், கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் கட்டணத்தை சீரமைத்தல், சேமிப்பில் வெள்ளத்தை குறைப்பதற்கான பட்ஜெட் ஆதரவு மற்றும் உள்கட்டமைப்பை செயல்படுத்துவதற்கான செலவுகளுக்கான பட்ஜெட் ஆதரவு போன்ற நடவடிக்கைகளுக்கு மார்ச் 2019-ல் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதாவது, சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டுதல்.
நீர்மின் திட்டங்களின் விரைவான வளர்ச்சிக்காகவும், தொலைதூர திட்டப்பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காகவும், முந்தைய திட்டத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:
உ) 200 மெகாவாட் வரையிலான திட்டங்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளுக்கான பட்ஜெட் ஆதரவு வரம்பு 200 மெகாவாட்டுக்கு மேல் உள்ள திட்டங்களுக்கு ஒரு மெகாவாட்டுக்கு ரூ.1.00 கோடி என்றும், 200 மெகாவாட்டுக்கு மேல் உள்ள திட்டங்களுக்கு ரூ.200 கோடி மற்றும் ரூ.0.75 கோடி என்றும் சீரமைக்கப்பட்டுள்ளது. விதிவிலக்கான நேர்வுகளில், போதிய நியாயங்கள் இருக்குமானால், திட்ட ஒதுக்கீட்டின் உச்சவரம்பு மெகாவாட்டிற்கு ரூ.1.5 கோடி வரை செல்லலாம்.
நன்மைகள்:
இந்த திருத்தப்பட்ட திட்டம், நீர்மின் திட்டங்களின் விரைவான வளர்ச்சிக்கு உதவும், தொலைதூர மற்றும் மலைப்பாங்கான திட்டப் பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், உள்ளூர் மக்களுக்கு அதிக எண்ணிக்கையிலான நேரடி வேலைவாய்ப்பை வழங்குவதுடன், போக்குவரத்து, சுற்றுலா, சிறு வணிகம் மூலம் மறைமுக வேலைவாய்ப்பு / தொழில் முனைவோர் வாய்ப்புகளையும் வழங்கும். இது நீர்மின் துறையில் புதிய முதலீடுகளை ஊக்குவிப்பதுடன், புதிய திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்றி முடிக்க ஊக்கமளிக்கும்.
***
MM/RR/KV