Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சிகாகோ உரையின் 132-வது ஆண்டையொட்டி சுவாமி விவேகானந்தரை பிரதமர் திரு. நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார்


1893-ம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய புகழ்பெற்ற உரையை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பகிர்ந்து கொண்டார்.

 

ஒற்றுமை, அமைதி, சகோதரத்துவம் என்ற இந்தியாவின் பழமையான கொள்கைகளை விவேகானந்தர் அறிமுகப்படுத்தினார் என்றும், அவை பல தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன என்றும் திரு மோடி கூறினார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

 

“1893-ம் ஆண்டு இதே நாளில் சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் தனது புகழ்பெற்ற உரையை நிகழ்த்தினார். ஒற்றுமை, அமைதி மற்றும் சகோதரத்துவம் என்ற இந்தியாவின் பழமையான செய்தியை அவர் உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அவரது உரைகள் தொடர்ந்து தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கின்றன, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் சக்தியை நமக்கு நினைவூட்டுகின்றன.

 

***

(Release ID: 2053632)

IR/RR/KR