அபுதாபி பட்டத்து இளவரசர் மேன்மை தங்கிய ஷேக் கலீத் பின் முகமது பின் சையீத் அல் நஹ்யானுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் வரவேற்பு அளித்தார். பல்வேறு பிரச்சனைகள் குறித்து இருதலைவர்களும் ஆக்கபூர்வ பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட் நட்புறவு விரிவாக்கத்திற்கு ஷேக் கலீதின் ஆர்வத்தை திரு மோடி பாராட்டினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;
“அபுதாபி பட்டத்து இளவரசர் மேன்மை தங்கிய ஷேக் கலீத் பின் முகமது பின் சையீத் அல் நஹ்யானுக்கு வரவேற்பு அளித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பல்வேறு பிரச்சனைகள் குறித்து நாங்கள் ஆக்கபூர்வ பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட் இடையே வலுவான நட்புறவை நோக்கிய அவரது ஆர்வம் தெளிவாக தெரிந்தது.”
***
(Release ID: 2053264)
SMB/AG/RR
It was a delight to welcome HH Sheikh Khaled bin Mohamed bin Zayed Al Nahyan, Crown Prince of Abu Dhabi. We had fruitful talks on a wide range of issues. His passion towards strong India-UAE friendship is clearly visible. pic.twitter.com/yoLENhjGWd
— Narendra Modi (@narendramodi) September 9, 2024