Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாராலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர் நவ்தீப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து


பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் எஃப் 41 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தடகள வீரர் நவ்தீப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“அசாத்திய திறன்களைக் கொண்ட நவ்தீப், 2024 பாராலிம்பிக்கில் (#Paralympics2024) ஆடவர் ஈட்டி எறிதல் எஃப் 41-ல் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்! அவரது வெற்றி அவரது சிறந்த செயல்திறனின் பிரதிபலிப்பாகும். அவருக்கு வாழ்த்துகள். அவரது வெற்றியால் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது. #Cheer4Bharat”

***

Release ID: 2052867

PLM/DL