மூன்று வந்தே பாரத் ரயில்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிரதமரின் ‘மேக் இன் இந்தியா‘ மற்றும் தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், அதிநவீன வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீரட் – லக்னோ, மதுரை – பெங்களூரு மற்றும் சென்னை – நாகர்கோவில் ஆகிய மூன்று வழித்தடங்களில் இணைப்பை மேம்படுத்தும். இந்த ரயில்கள் உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இணைப்பை மேம்படுத்தும்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், மதுரை – பெங்களூரு, சென்னை – நாகர்கோவில் மற்றும் மீரட் – லக்னோ வந்தே பாரத் ரயில்கள் இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கப்படுவதால், வடக்கிலிருந்து தெற்கு வரையிலான இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் புதிய அத்தியாயம் எழுதப்படுவதாகக் கூறினார். நாட்டில் வந்தே பாரத் ரயில்களை நவீனமயமாக்குதல் மற்றும் விரிவுபடுத்துவதன் மூலம் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி நாடு முன்னேறி வருவதை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கப்படும் மூன்று புதிய வந்தே பாரத் ரயில்கள் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இவை நாட்டின் முக்கிய நகரங்களுக்கும், வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்களுக்கும் இணைப்பை வழங்கியுள்ளன என்றார். “கோவில் நகரம் மதுரை இப்போது தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூருடன் இணைக்கப்பட்டுள்ளது”, இது குறிப்பாக வார இறுதி நாட்கள் அல்லது பண்டிகை காலங்களில் இணைப்பை எளிதாக்குவது மட்டுமல்லாமல், யாத்ரீகர்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். சென்னை-நாகர்கோவில் வழித்தடம் மாணவர்கள், விவசாயிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பெரிதும் பயனளிக்கும். வந்தே பாரத் ரயில்களுடன் இணைக்கப்பட்ட இடங்களில் சுற்றுலாவின் வளர்ச்சியைக் குறிப்பிட்ட திரு மோடி, இந்தப் பிராந்தியத்தில் வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்புகளின் வளர்ச்சியை இது குறிக்கிறது என்றார். மூன்று புதிய வந்தே பாரத் ரயில்களுக்காக குடிமக்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை அடைய தென் மாநிலங்களின் விரைவான வளர்ச்சி அவசியம் என்று பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். “தென்னிந்தியா மகத்தான திறமை, வளங்கள் மற்றும் வாய்ப்புகளின் நிலம்” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார், ஒட்டுமொத்த தென்னிந்தியாவுடன் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் அரசின் முன்னுரிமை என்று அவர் குறிப்பிட்டார். ரயில்வேயின் வளர்ச்சிப் பயணம் அரசின் உறுதிப்பாட்டுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று அவர் கூறினார். இந்த ஆண்டு தமிழக ரயில்வே பட்ஜெட்டுக்கு ரூ.6,000 கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை இன்று முதல் 8 ஆக உயரும் என்று அவர் மேலும் கூறினார். இதேபோல், இந்த ஆண்டு பட்ஜெட்டில் கர்நாடகாவுக்கு ரூ .7000 கோடிக்கு மேல் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது, இது 2014- ஐ விட 9 மடங்கு அதிகம். கர்நாடகாவை இன்று இணைக்கும் 8 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
கடந்த கால பட்ஜெட்டுகளில் இருந்து சில விஷயங்களை சுட்டிக்காட்டிய பிரதமர், தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் ரயில் போக்குவரத்து பல மடங்கு அதிகரிக்கப்பட்டு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது என்றார். ரயில் தடங்கள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், ரயில் தடங்கள் மின்மயமாக்கப்பட்டு வருவதாகவும், ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இது மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை அதிகரித்துள்ளது என்றும், எளிதாக வர்த்தகம் செய்வதற்கு வழிவகுத்துள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
மீரட்-லக்னோ வழித்தடத்தில் புதிய வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டதை எடுத்துரைத்த திரு மோடி, அதற்காக மேற்கு உத்தரப்பிரதேச மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். புரட்சி பூமியான மீரட் மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசம் பகுதி இன்று புதிய வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார். மீரட்டை தேசியத் தலைநகர் புதுதில்லியுடன் இணைக்க ஆர்ஆர்டிஎஸ் உதவியது என்றாலும், வந்தே பாரத் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் மாநிலத் தலைநகர் லக்னோவுக்கான தூரமும் இப்போது குறைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். “நவீன ரயில்கள், அதிவேக நெடுஞ்சாலைகளின் வலைப்பின்னல் மற்றும் விமான சேவைகள் விரிவாக்கம் ஆகியவற்றின் மூலம் பிரதமர் கதிசக்தியின் தொலைநோக்கு பார்வை நாட்டின் உள்கட்டமைப்பை எவ்வாறு மாற்றும் என்பதற்கு தேசிய தலைநகர் பிராந்தியம் ஒரு உதாரணமாக மாறி வருகிறது” என்று திரு மோடி கூறினார்.
“வந்தே பாரத் இந்திய ரயில்வேயின் நவீனமயமாக்கலின் புதிய முகம்” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு வழித்தடத்திலும் வந்தே பாரத் திட்டத்தின் தேவை அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், அதிவேக ரயில்களின் வருகை மக்கள் தங்கள் வர்த்தகம், வேலைவாய்ப்பு மற்றும் கனவுகளை விரிவுபடுத்துவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்றார். “இன்று, நாடு முழுவதும் 102 வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன, இதுவரை 3 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த ரயில்களில் பயணம் செய்துள்ளனர்” என்று அவர் தெரிவித்தார். இந்த எண்கள் வந்தே பாரத் ரயில்களின் வெற்றிக்கு சான்று மட்டுமல்ல, இந்தியாவின் விருப்பங்கள் மற்றும் கனவுகளின் அடையாளமும் கூட என்று அவர் வலியுறுத்தினார்.
வளர்ச்சியடைந்த பாரதம் தொலைநோக்குப் பார்வையின் வலுவான தூணாக நவீன ரயில் கட்டமைப்பு விளங்குகிறது என்பதை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். இத்துறையில் ஏற்பட்டுள்ள துரிதமான முன்னேற்றத்தை கோடிட்டுக் காட்டிய பிரதமர், ரயில் பாதைகளை இரட்டிப்பாக்குதல், மின்மயமாக்குதல், புதிய ரயில்களை இயக்குதல் மற்றும் புதிய வழித்தடங்கள் அமைத்தல் ஆகியவற்றை குறிப்பிட்டார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரயில்வேக்கு ரூ .2.5 லட்சம் கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பழைய தோற்றத்தை மாற்ற அரசு இந்திய ரயில்வேயை உயர் தொழில்நுட்ப சேவைகளுடன் இணைக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். விரிவாக்கத் திட்டங்கள் பற்றிப் பேசிய பிரதமர், வந்தே பாரத் திட்டத்துடன் அமிர்த பாரத் ரயில்களும் விரிவுபடுத்தப்பட்டு வருவதாகக் கூறினார். வந்தே பாரத்தின் தூங்கும் வசதி கொண்ட ஸ்லீப்பர் பதிப்பு மிக விரைவில் கொடியசைத்து தொடங்கப்படும் என்று அவர் மேலும் கூறினார். மக்களின் வசதிக்காக நமோ பாரத் ரயில்கள் இயக்கப்படுவது குறித்தும், நகரங்களுக்குள் போக்குவரத்து பிரச்சினைகளை சமாளிக்க வந்தே மெட்ரோ விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் பேசினார்.
இந்திய நகரங்கள் எப்போதுமே அவற்றின் ரயில் நிலையங்களால் அடையாளம் காணப்படுகின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார். அமிர்த பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் மூலம், ரயில் நிலையங்கள் மேம்பாடு அடைந்து, நகரங்களுக்கு புதிய அடையாளத்தை அளித்துள்ளது என்றும் அவர் கூறினார். “நாட்டில் 1300-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன, அவற்றில் சில விமான நிலையங்களைப் போல கட்டப்பட்டு வருகின்றன” என்று திரு மோடி கூறினார். மிகச்சிறிய ரயில் நிலையங்கள் கூட அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வருவதாகவும், இதன் விளைவாக பயணத்தை எளிதாக்குவது அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.
“ரயில்வே, சாலைகள் மற்றும் நீர்வழிகள் போன்ற இணைப்பு உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்படும்போது, நாடு வலுப்பெறுகிறது” என்று குறிப்பிட்ட பிரதமர், அது நாட்டின் சாதாரண குடிமக்களுக்கு அவர்கள் ஏழைகளாக இருந்தாலும் சரி, நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும் சரி, பயனளிக்கிறது என்றும் கூறினார். நவீன உள்கட்டமைப்பு வளர்ச்சியை நாடு கண்ணுற்று கொண்டாடுவதால், ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இன்று அதிகாரம் அளிக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். உள்கட்டமைப்பு விரிவாக்கத்துடன், வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதையும், புதிய வாய்ப்புகள் கிராமங்களை சென்றடைவதையும் அவர் உதாரணங்களுடன் எடுத்துரைத்தார். கிராமங்களில் புதிய வாய்ப்புகள் வந்ததற்கு மலிவான தரவு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பையும் பிரதமர் மோடி பாராட்டினார். “மருத்துவமனைகள், கழிப்பறைகள் மற்றும் பக்கா வீடுகள் சாதனை எண்ணிக்கையில் கட்டப்படும்போது, ஏழைகளில் ஏழைகள் கூட நாட்டின் வளர்ச்சியின் பலனைப் பெறுகிறார்கள். கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தொழில்துறை போன்ற உள்கட்டமைப்பு வளர்ச்சியடையும் போது, அது இளைஞர்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது” என்று பிரதமர் கூறினார். இதுபோன்ற பல்வேறு முயற்சிகள் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து வெளியே வர முடிந்தது என்றும் அவர் கூறினார்.
பல ஆண்டுகளாக நிலவி வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த ரயில்வே துறை கடுமையாக உழைத்து வருவதாக அவர் தெரிவித்தார். இந்த திசையில் இந்தியா நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதை ஒப்புக் கொண்ட அவர், ஏழைகள் அல்லது நடுத்தர வர்க்கம் என அனைவருக்கும் வசதியான பயணத்தை இந்திய ரயில்வே உத்தரவாதம் செய்யும் வரை ஓயப்போவதில்லை என்று உறுதியளித்தார். வறுமையை ஒழிப்பதில் நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மூன்று புதிய வந்தே பாரத் ரயில்களுக்காக தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேச மக்களுக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று திரு மோடி தமது உரையை நிறைவு செய்தார்.
மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்தி பென் படேல், தமிழக ஆளுநர் திரு ஆர் என் ரவி, மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன், உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் கலந்து கொண்டனர்.
பின்னணி
மீரட் நகரம் – லக்னோ வந்தே பாரத் இரு நகரங்களுக்கும் இடையிலான தற்போதைய அதிவேக ரயிலுடன் ஒப்பிடும்போது பயணிகளுக்கு சுமார் 1 மணி நேரத்தை மிச்சப்படுத்த உதவும். இதேபோல், சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் மற்றும் மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில்கள் முறையே 2 மணி நேரம் மற்றும் 1 மணி 30 நிமிடங்களுக்கு மேல் பயணத்தை மிச்சப்படுத்தும்.
இந்த புதிய வந்தே பாரத் ரயில்கள் இப்பகுதி மக்களுக்கு வேகத்துடனும் வசதியுடனும் பயணிக்க உலகத் தரம் வாய்ந்த வழிகளை வழங்கும், மேலும் உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு சேவை செய்யும். இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் அறிமுகம், வழக்கமான பயணிகள், தொழில் வல்லுநர்கள், வணிக மற்றும் மாணவர் சமூகங்களின் தேவைகளை பெருமளவில் பூர்த்தி செய்யும் வகையில் புதிய தரத்திலான ரயில் சேவையை அறிவிக்கும்.
********
PKV/DL
In a significant boost to rail travel, three new Vande Bharat trains are being flagged off. These will improve connectivity across various cities of Uttar Pradesh, Karnataka and Tamil Nadu.https://t.co/td9b8ZcAHC
— Narendra Modi (@narendramodi) August 31, 2024
वंदे भारत ट्रेनों का ये विस्तार, ये आधुनिकता, ये रफ्तार…
— PMO India (@PMOIndia) August 31, 2024
हमारा देश ‘विकसित भारत’ के लक्ष्य की ओर कदम दर कदम बढ़ रहा है: PM @narendramodi pic.twitter.com/evdFH01bFc
विकसित भारत के लक्ष्य को पूरा करने के लिए दक्षिण के राज्यों का तेज विकास बहुत जरूरी है: PM @narendramodi pic.twitter.com/AtWgtqvKbT
— PMO India (@PMOIndia) August 31, 2024
वंदे भारत आधुनिक होती भारतीय रेलवे का नया चेहरा है। pic.twitter.com/1rF73yX3Ou
— PMO India (@PMOIndia) August 31, 2024