Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டி.இசட்.எம்.ஒ இந்தியாவின் மேலாண் இயக்குநர் திருமிகு அலினா போஸ்லுஸ்னியுடன் பிரதமர் சந்திப்பு

டி.இசட்.எம்.ஒ இந்தியாவின் மேலாண் இயக்குநர் திருமிகு  அலினா போஸ்லுஸ்னியுடன்  பிரதமர் சந்திப்பு


பிரதமர் திரு. நரேந்திர மோடி, போலந்து நாட்டில் பல்வகை சுகாதாரப் பொருட்கள் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான டி.இசட்.எம்.ஒ இந்தியாவின் மேலாண் இயக்குநர் திருமதி அலினா போஸ்லுஸ்னியை சந்தித்துப் பேசினார்.

இந்தியாவில் உற்பத்தி செய்வோம் இயக்கம் மற்றும் அந்நிய நேரடி முதலீட்டில் அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாராளமயமாக்கல் கொள்கைகள் போன்ற பல்வேறு கொள்கைகள் மற்றும் முன்முயற்சிகளை பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் செழிப்பான சந்தை மற்றும் முதலீட்டு வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு, டி.இசட்.எம்.ஓவின் விரிவாக்கத் திட்டங்கள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இந்தியாவில் வழங்கப்படும் ஆதரவு மற்றும் வாய்ப்புகளுக்கு திருமிகு போஸ்லுஸ்னி தனது நன்றியைத் தெரிவித்தார்.

BR/KR

***