Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய– மலேசிய விரிவான உத்திசார் கூட்டாண்மை குறித்த கூட்டறிக்கை

இந்திய– மலேசிய விரிவான உத்திசார் கூட்டாண்மை குறித்த கூட்டறிக்கை


ஆகஸ்ட் ​20, 2024 அன்று, மலேசியப் பிரதமர் டத்தோ அன்வர் இப்ராஹிம், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் அன்பான அழைப்பை ஏற்று, அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்தார். தெற்காசிய பிராந்தியத்திற்கு மலேசிய பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும், மேலும் இரு பிரதமர்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும். இந்திய-மலேசிய உறவுகளை பன்முகத்தன்மை கொண்டதாக மாற்றும் பல துறைகளை இந்த விரிவான விவாதங்கள் உள்ளடக்கியிருந்தது.

பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு குடியரசுத்தலைவர் மாளிகையில் சம்பிரதாய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது, மேலும் அவர் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்த ராஜ்காட்டிற்கு சென்றார். இதைத் தொடர்ந்து இரு நாட்டு பிரதமர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்தினர். அதன்பிறகு, இருதரப்பு ஆவணங்கள் பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சியை பிரதமர்கள் பார்வையிட்டனர். பிரதமர் திரு மோடி அளித்த விருந்தில் பிரதமர் அன்வர் இப்ராஹிம் கலந்து கொண்டார். இந்தியக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவை பிரதமர் அன்வர் இப்ராஹிம் சந்தித்துப் பேசினார். இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், பிரதமர் அன்வார் இப்ராஹிமை சந்தித்தார். உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் பிரதமர் அன்வர் இப்ராஹிம் உரையாற்றினார்.

2015-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் மலேசியா இடையே ஏற்படுத்தப்பட்ட மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு, இருதரப்பு உறவுகளை பல பரிமாணங்களைக் கொண்ட ஒன்றாக முன்னெடுத்துச் செல்ல உதவியுள்ளது என்பதை இரு பிரதமர்களும் அங்கீகரித்தனர். அரசியல், ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், புதிய தொழில்கள், நிதிநுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட எரிசக்தி, சுகாதாரம், உயர் கல்வி, கலாச்சாரம், சுற்றுலா மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு பிரதமர்களும் விவாதித்தனர்.

2025-ஆம் ஆண்டில் கணிசமான முடிவை எட்டவும், இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கு இடையே விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தவும், ஆசியான் இந்தியா சரக்கு வர்த்தக ஒப்பந்தத்தை மேலும் சிறப்பானதாகவும், பயனாளிகளுக்கு உகந்ததாகவும், எளிமையாகவும், வர்த்தகத்திற்கு உகந்ததாகவும் மாற்றும் வகையில் மறுஆய்வு செயல்முறையை விரைவுபடுத்தவும், ஆதரவளிக்கவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன.

இரு நாடுகளின் டிஜிட்டல் பொருளாதார முன்னுரிமைகளை அங்கீகரித்த தலைவர்கள், இந்தியாவின் ஒருங்கிணைந்த கட்டண இடையீட்டின் (யு.பி.ஐ) வெற்றியை ஒப்புக் கொண்டதுடன், இந்தியா மற்றும் மலேசியா இடையே பணம் செலுத்தும் முறைகளில் தற்போது நடைபெற்று வரும் முறைகளையும் பாராட்டினர்.

விண்வெளி, அணுசக்தி, குறைக்கடத்திகள், தடுப்பூசிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பிற பகுதிகள் உள்ளிட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இரு பிரதமர்களும் ஒப்புக் கொண்டனர்.

இரு பிரதமர்களும் பயங்கரவாதத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் நிராகரிக்குமாறு நாடுகளை கேட்டுக் கொள்ள ஒப்புக் கொண்டனர். எந்தவொரு நாடும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய இரு பிரதமர்களும், உள்நாட்டு சட்டங்கள் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளுக்கு ஏற்ப பயங்கரவாத குற்றவாளிகளை விரைவாக நீதியின் முன் நிறுத்த ஒன்றிணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டனர்.

​இந்தப் பயணத்தையொட்டி தனக்கும், தனது குழுவினருக்கும் அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பு மற்றும் உபசரிப்புக்காக பிரதமர் திரு மோடிக்கு நன்றி தெரிவித்த பிரதமர் அன்வர் இப்ராஹிம், விரைவில் மலேசியாவுக்கு பயணம் மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமருக்கு அழைப்பு விடுத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2047076

 

BR/KR

***