Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் பிரதமருடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை


பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (16.08.2024) பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் பேராசிரியர் முகமது யூனுசுடன் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த தொலைபேசி அழைப்பின் போது, ஜனநாயக முறையிலான, நிலையான, அமைதியான மற்றும் முன்னேற்றகரமான பங்களாதேஷிற்கு இந்தியா  எப்போதும் ஆதரவு அளிக்கும் என பிரதமர் உறுதிபட தெரிவித்துள்ளார். பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் வாயிலாக பங்களாதேஷ் மக்களுக்கான ஆதரவு தொடரும் என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டையும், பிரதமர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இந்துக்கள் மற்றும் பிற அனைத்து சிறுபான்மை சமுதாயத்தினரும் பாதுகாப்பாகவும்பத்திரமாகவும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த பேராசிரியர் யூனுஸ், பங்களாதேஷில் வசிக்கும் இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையின குழுக்களும் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் இருப்பதற்கு இடைக்கால அரசு முன்னுரிமை அளிக்கும் என்று உறுதி அளித்துள்ளார்.

இருநாடுகளின் தேசிய முன்னுரிமைக்கு ஏற்ப இருதரப்பு நட்புறவை மேலும் முன்னெடுத்து செல்வதற்கான வழிமுறைகள் குறித்தும், இருதலைவர்களும் விவாதித்தனர்.

***

(Release ID: 2045966)

MM/AG/RR